கடத்தி வந்து திருமணம் செய்தாரா கள்ளக்குறிச்சி எம்எல்ஏ..? மணப்பெண் வெளியிட்ட வீடியோ ..!

Author: Babu
6 October 2020, 4:30 pm
admk mrg - updatenews360
Quick Share

கள்ளக்குறிச்சி : கள்ளக்குறிச்சி எம்எல்ஏ பிரபு, கல்லூரி மாணவியை கடத்தி வந்து திருமணம் செய்து கொண்டதாக புகார் அளிக்கப்பட்ட நிலையில், மணப்பெண்ணே வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார்.

கள்ளக்குறிச்சி தனித்தொகுதியின் அதிமுக சட்டமன்ற உறுப்பினர் பிரபு. 34 வயதான இவர் தன்னை விட 15 வயது குறைவான, தியாகதுருகம் பகுதியைச் சேர்ந்த சுவாமிநாதன் என்பவரின் 19 வயது மகள் சவுந்தர்யாவை காதலித்து வந்துள்ளார். இவர்களின் காதலைப் பெற்றோர் ஏற்காத நிலையில், கடந்த அக்டோபர் 1-ம் தேதி சவுந்தர்யா வீட்டை விட்டு வெளியேறியுள்ளார்.

இதைத் தொடர்ந்து, பிரபுவின் பெற்றோர் முன்னிலையில் இருவரும் திருமணம் செய்து கொண்டனர். ஆனால், எம்எல்ஏ பிரபு தன் மகளைக் கடத்தியிருப்பதாகவும், மகளை மீட்டு, கடத்தியவர்கள் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி சவுந்தர்யாவின் தந்தை சாமிநாதன் தியாகதுருகம் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார்.

kalakurichi mla marriage 1 - updatenews360

இந்த சூழலில், தங்களின் திருமணத்திற்கு சவுந்தர்யாவின் வீட்டில் மறுப்பு தெரிவித்ததால், வீட்டைவிட்டு வெளியேறி தன்னை முழு மனதுடன் திருமணம் செய்துகொண்டதாக பிரபு காணொலி ஒன்றை வெளியிட்டார்.

இந்நிலையில், அதிமுக எம்எல்ஏ பிரபுவால் கடத்தப்பட்ட தன் மகளை மீட்டு நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தக் கோரி சென்னை உயர் நீதிமன்றத்தில் அவரது தந்தை சாமிநாதன் ஆட்கொணர்வு மனு ஒன்றை தாக்கல் செய்துள்ளார். அதில், கல்லூரியில் படித்து வந்த தனது மகளிடம், எம்எல்ஏ பிரபு ஆசை வார்த்தைகளைக் கூறி ஏமாற்றிக் கடத்தி சென்று, திருமணம் செய்து கொண்டதாக தெரிவித்துள்ளார்.

இந்த மனுவை அவசர வழக்காக விசாரிக்க வேண்டும் என்ற சாமிநாதனின் கோரிக்கையை நீதிபதிகள் ஏற்றுக் கொண்டதால், நாளை இந்த வழக்கு விசாரணைக்கு வருகிறது.

இந்த நிலையில், தனது திருமணம் குறித்து மணப்பெண் சவுந்தர்யா தற்போது வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில், தன்னை யாரும் கடத்தவில்லை என்றும், நாங்கள் காதலித்து வந்தோம், தன்னுடைய முழு சம்மதத்துடன் இந்த திருமணம் நடைபெற்றதாக அதில் கூறியுள்ளார்.

Views: - 55

0

0