கொரோனாவிடம் இருந்து தொகுதி மக்களை காப்பாற்றுங்க : புதிய எம்எல்ஏக்களுக்கு கமல்ஹாசன் கோரிக்கை..!!

11 May 2021, 12:05 pm
Kamal Sellur Raju-Updatenews360
Quick Share

சென்னை : தமிழக சட்டப்பேரவையில் புதிதாக எம்எல்ஏக்களாக பதவியேற்றுக் கொண்ட எம்எல்ஏக்களுக்கு மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன் கோரிக்கை ஒன்றை விடுத்துள்ளார்.

16வது சட்டப்பேரவையின் முதல் கூட்டத் தொடர் இன்று கலைவாணர் அரங்கில் தொடங்கியது. இதில், தற்காலிக அவைத் தலைவர் கு.பிச்சாண்டி முன்னிலையில், உறுப்பினர்கள் உறுதிமொழியை வாசித்து பதவியேற்றுக் கொண்டனர். முதலாவதாக முதலமைச்சர் முக ஸ்டாலின் எம்எல்ஏவாக பொறுப்பேற்றுக் கொண்டார். எதிர்கட்சி தலைவராக எடப்பாடி பழனிசாமியும் பதவியேற்றுக் கொண்டனர்.

இதைத் தொடர்ந்து, சட்டப்பேரவைக்கு புதிதாக தேர்வு செய்யப்பட்ட எம்எல்ஏக்கள் பொறுப்பேற்றுக் கொண்டனர். 20 ஆண்டுகளுக்கு பிறகு பாஜக சார்பில் சட்டப்பேரவைக்குள் அடியெடுத்து வைத்த வானதி சீனிவாசன், நயினார் நாகேந்திரன், எம்ஆர் காந்தி உள்பட 4 எம்எல்ஏக்களும் உறுதிமொழியை வாசித்து பதவியேற்றுக் கொண்டனர்.

இந்த நிலையில், புதிதாக எம்எல்ஏக்களாக பதவியேற்றுக் கொண்ட எம்எல்ஏக்களுக்கு மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன் வாழ்த்து தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக அவர் விடுத்துள்ள டுவிட்டர் பதிவில், “இன்று சட்டமன்ற உறுப்பினர்களாகப் பதவி ஏற்றுக் கொள்ளும் அனைவருக்கும் எனது மனமார்ந்த வாழ்த்துக்கள். அவரவர் தொகுதி மக்களை கொரோனாவிலிருந்து காப்பதை முழுமுதற் கடமையாகக் கருதி செயலாற்றும்படி அனைவரையும் கேட்டுக்கொள்கிறேன்,” என பதிவிட்டுள்ளார்.

Views: - 141

0

0