சென்னை மக்களுக்கு உதவுங்கள்…அதுதான் எனக்கு தரும் பிறந்தநாள் பரிசு: ரசிகர்களுக்கு கமல்ஹாசன் அன்பு கட்டளை..!!

Author: Aarthi Sivakumar
7 November 2021, 12:57 pm
Quick Share

சென்னை: வெள்ளத்தால் தவிக்கும் சென்னை மக்களுக்கு உதவிகளை செய்யுங்கள், அதுதான் எனக்குத் தரும் பிறந்தநாள் பரிசு என கமல்ஹாசன் ரசிகர்களுக்கு தெரிவித்துள்ளார்.

மக்கள் நீதி மய்யம் கட்சித்தலைவரும், உலக நாயகனுமான கமல்ஹாசன் தனது 67வது பிறந்த நாளை இன்று கொண்டாடுகிறார். இதை முன்னிட்டு அவருக்கு அரசியல் கட்சி தலைவர்கள், சினிமா பிரபலங்கள், பொதுமக்கள், ரசிகர்கள் அவருக்கு வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.

இந்நிலையில், சென்னையில் நேற்று முதல் விடாமல் விடிய விடிய மழை பெய்தது. இந்த மழை இன்று காலையிலும் நீடித்ததால் ரோடுகளில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடியது. இதனால் பல இடங்களில் கழிவு நீர் தண்ணீருடன் கலந்து ஓடியதால் பொதுமக்கள் இதை கடக்க பெரிதும் சிரமப்பட்டனர்.

மேலும், சென்னையில் அடுத்த சில மணி நேரத்திற்கு மிக மிக கனமழை பெய்யும் என வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்தது. இந்நிலையில் கமல்ஹாசன் ட்விட்டரில் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார்.

Image

இது குறித்து அவர் வெளியிட்ட டுவிட்டர் பதிவில், மநீம உறவுகளே, மழை வெள்ளத்தால் தவிக்கும் ஏழை எளிய மக்களுக்கு வேண்டிய உதவிகளை விரைந்து செய்யுங்கள்; அதுதான் நீங்கள் எனக்குத் தரும் சிறந்த பிறந்தநாள் பரிசாக இருக்கமுடியும் என்று தெரிவித்துள்ளார்.

Views: - 375

0

0