இயக்குநர் பாரதிராஜா மருத்துவமனையில் இருந்து வீடு திரும்பிய தகவலை தன்னுடன் பகிர்ந்து கொண்டதாக நடிகர் கமல்ஹாசன் தெரிவித்துள்ளார்.
உடல்நலக்குறைவால் பாதிக்கப்பட்டிருந்த இயக்குநர் பாரதிராஜா கடந்த சில நாட்களுக்கு முன்புதான் அமைந்தகரையில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வீடு திரும்பினார். இந்நிலையில் அவருக்கு மீண்டும் உடல்நலக்குறைவு ஏற்பட்டு கடந்த வாரம் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.
அவருக்கு சிறுநீராக பாதையில் அடைப்பு ஏற்பட்டதால் அதற்கான சிகிச்சை அளிக்கப்பட்டது. இயக்குநர் பாரதிராஜாவுக்கு அடிக்கடி உடல் நலக்குறைவு ஏற்படுவது அவரது ரசிகர்கள் மட்டுமின்றி திரைத்துறையினருக்கும் கவலை ஏற்படுத்தி வருகிறது.
இந்நிலையில் பாரதிராஜா நேற்று மருத்துவமனையில் இருந்து வீடு திரும்பியுள்ளார். வீடு திரும்பிய கையோடு நடிகர் கமல்ஹாசனை போனில் தொடர்பு கொண்டு தான் வீடு திரும்பிய தகவலை தெரிவித்துள்ளார். இதனை கமல்ஹாசன் தனது டிவிட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.
அதில் “நலம் பெற்று வீடு திரும்பிய திரு. பாரதிராஜா, அம்மகிழ்ச்சியான செய்தியை இன்று என்னுடன் தொலைபேசியில் பகிர்ந்து கொண்டார். மருத்துவமனையில் நலம் விசாரிக்கச் சென்றபோது, ஆஸ்பத்திரியில் உங்களைப் பார்க்க எனக்குப் பிடிக்கவில்லை.. சீக்கிரம் வீடு திரும்புங்கள், நான் புறப்படுகிறேன் என்று சொன்னேன். Ok see you later for sure, Bye என்று ஆங்கிலத்தில் சொல்லி வழியனுப்பினார். சொன்ன வாக்கைக் காப்பாற்றிய என் தேனிக்கார நண்பருக்கு இந்தப் பரமக்குடியானின் வாழ்த்துக்கள்”… இவ்வாறு நடிகர் கமல்ஹாசன் தனது டிவிட்டர் பக்கத்தில் குறிப்பிட்டுள்ளார்.
திருப்பத்தூர் மாவட்டம் ஜோலார்பேட்டை அடுத்த குருமன்ஸ் காலனி பகுதியைச் சேர்ந்த ராஜி இவருடைய மனைவி லட்சுமி இவர்களுக்கு ராஜலட்சுமி…
நீக்கப்பட்ட முகலாயர்கள் வரலாறு ஒன்றிய அரசின் தேசிய கல்வி ஆராய்ச்சி மற்றும் பயிற்சி கவுன்சில் (NCERT) 7 ஆம் வகுப்பு…
இந்திய சினிமாவின் அகராதி இந்திய சினிமா வரலாற்றை கமல்ஹாசனை தவிர்த்துவிட்டு எழுதமுடியாது. உலகளவிலான தொழில்நுட்பங்களை இந்திய சினிமாவிற்கு அறிமுகப்படுத்தியவர் கமல்ஹாசனே.…
தென்னிந்தியாவில் தற்போது புகழ்பெற்ற நடிகையாக வலம் வருபவர் பூஜா ஹெக்டே. இவர் முதன் முதலில் தமிழ் சினிமாவில் மிஷ்கினால் அறிமுகம்…
கரூர் மாவட்டம், க.பரமத்தி பகுதியில் கடந்த 26.04.2025 தேதியன்று காட்டு முன்னூர் என்ற பகுதியில் அடையாளம் தெரியாத ஆண் சடலம்…
அமோக ஆதரவு சசிகுமார், சிம்ரன் ஆகியோரின் நடிப்பில் கடந்த மே தினத்தை முன்னிட்டு வெளியான “டூரிஸ்ட் ஃபேமிலி” திரைப்படம் ரசிகர்களின்…
This website uses cookies.