தமிழக அரசியலில் மறுமலர்ச்சி ஏற்படுத்தியவர் அறிஞர் அண்ணா : கமல்ஹாசன் புகழாரம்..!

15 September 2020, 11:20 am
Kamal_Haasan_2
Quick Share

சென்னை : அறிஞர் அண்ணாவின் 112வது பிறந்த நாளையொட்டி, மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவர் கமல்ஹாசன் வாழ்த்து தெரிவித்துள்ளார்.

திராவிட இயக்கத்தின் மூத்த தலைவர்களில் முன்னோடியான அறிஞர் அண்ணாவின் 112வது பிறந்த நாள் இன்று கொண்டாடப்பட்டு வருகிறது. திராவிட கட்சிகள் சார்பில் அண்ணாவின் பிறந்த நாள் கொண்டாட்டங்களும் நடத்தப்பட்டு வருகிறது. அதேபோல, அதிமுக, திமுக உள்ளிட்ட கட்சிகளின் தலைவர்களும் அவரது உருவப்படத்திற்கு மரியாதை செலுத்தி வருகின்றனர்.

இந்த நிலையில், அண்ணாவின் 112வது பிறந்த நாளையொட்டி, மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவர் கமல்ஹாசன் வாழ்த்து தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள டுவிட்டர் பதிவில், “
பேரறிஞர் அண்ணா- திராவிடப் பெருங்கனவு கண்டு,தமிழர் நாட்டிற்கு தமிழ்நாடு எனப் பெயர் சூட்டியவர். சமூக நீதிக் கொள்கைகளை அரசியல் சட்டமாக்கி, சமநீதி சமத்துவச் சீர்திருத்தம் தந்தவர். தமிழக அரசியலில் மறுமலர்ச்சி ஏற்படுத்தி, அரசியல் கற்கும் பல தம்பிகளுக்கு இன்றும் அண்ணனாய் நினைவில் வாழ்பவர்,” எனக் குறிப்பிட்டுள்ளார்.

Views: - 1

0

0