ரஜினியோடு இணைந்து நடிக்க தயார்.. ஆனால் முடிவு அவர்கள் கையில்.. ! நடிகர் கமல்..!

Author: Rajesh
9 June 2022, 1:52 pm
Quick Share

லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் கமல்ஹாசன் நடிப்பில் வெளியாகியிருக்கும் விக்ரம் படத்திற்கு மாபெரும் அளவில் வரவேற்பு கிடைத்துள்ளது. கமலின் படங்களில் இந்த அளவுக்கு எந்த படங்களுக்கும் வரவேற்புக் கிடைத்தது இல்லை. இதனால் கமல் மிகுந்த மகிழ்ச்சியில் உள்ளார்.

இப்படத்தில் கமலஹாசன், விஜய் சேதுபதி, பகத் பாசில் என அனைவருக்கும் சமமான முக்கியத்துவம் கொடுக்கப்பட்டிருந்தது. அதேபோல் சூர்யா நடித்த ரோலக்ஸ் கதாபாத்திரமும் பெரிய அளவில் கவனம் பெற்றது. இதனால் படம் வேற லெவலில் பிளாக்பஸ்டர் ஹிட்டாகியுள்ளது.

இந்நிலையில் இந்த மகிழ்ச்சியை கொண்டாடும் விதத்தில் இப்படத்தின் இயக்குனர் லோகேஷ் கனகராஜுக்கு ஒரு கோடி மதிப்பிலான ஆடம்பரமான கார் ஒன்றை கமல் பரிசாக வழங்கினார். மேலும் இப்படத்தில் பணியாற்றிய உதவி இயக்குனர்கள் அனைவருக்கும் TVS Apache RTR 160 பைக்கை பரிசாக அளித்தார்.

3 நிமிடங்கள் மட்டுமே வந்து மிரட்டி இருந்த சூர்யாவுக்கு ரோலக்ஸ் வாட்ச் ஒன்றை பரிசாக அளித்துள்ளார். இந்த புகைப்படங்களை தனது சமூக வலைத்தள பக்கத்தில் சூர்யா பதிவிட்ட நன்றியை தெரிவித்துள்ளார். தற்போது இந்த புகைப்படங்கள் இணையத்தில் வைரலாக பரவி வருகிறது. இதுவரை கமலின் படங்கள் செய்யாத சாதனையை விக்ரம்படம் செய்து வருகிறது. தற்போது வரை உலகம் முழுவதும் 250 கோடி வசூலை நெருங்கி உள்ளதால் உச்சகட்ட மகிழ்ச்சியில் கமல் படக்குழுவுக்கு பரிசை வாரி வழங்கி வருகிறார்.

கிட்டத்தட்ட நான்கு அண்டுகளாக கமலின் படம் வெளியாகாமல் இருந்த நிலையில் விக்ரம் படத்தின் மூலம் தரமான கம்பேக் கொடுத்துள்ளார். இந்நிலையில் ரஜினியோடு இணைந்து நடிக்க தயாராக இருப்பதாக கமல் தெரிவித்துள்ளார். ஆனால் நடிகர் ரஜினிகாந்தும், இயக்குனர் லோகேஷ் கனகராஜ்-ம் முடிவு செய்தால் நடிக்க தயாராக இருப்பதாகவும் தெரிவித்துள்ளார்.

Views: - 464

1

0