கள்ள ஓட்டுக் கலாச்சாரம் தொடர்வது தமிழகத்தின் அவலம்: கமல்ஹாசன்

Author: kavin kumar
7 October 2021, 10:56 pm
Quick Share

சென்னை: தமிழகத்தில் கள்ள ஓட்டு கலாச்சாரம் இன்னும் இருக்கிறது என்பதை அறிந்து வேதனைப்படுகிறேன் என்று கமலஹாசன் தனது டுவிட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார்

தமிழகத்தில் நேற்று ஊரக உள்ளாட்சி தேர்தலில் முதல் கட்ட வாக்குப் பதிவு நடைபெற்றது என்பது தெரிந்ததே. இதில் உத்திரமேரூரை சேர்ந்த பார்வதி என்ற பெண்ணின் ஓட்டை வேறு யாரோ கள்ள ஓட்டாக செலுத்தி விட்டதாக தகவல் வெளியாகி பெரும் பரபரப்பு ஏற்பட்டதுஇதனை அடுத்து அவருக்கு 49b என்ற பிரிவின்படி பார்வதி என்ற பெண்ணுகு வாக்களிக்க தேர்தல் அதிகாரிகள் அனுமதி அளித்தனர்.இந்த நிலையில் குறித்து மக்கள் நீதி மய்யம் தலைவர் கமலஹாசன் கருத்து தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் கூறியிருப்பதாவது:- உத்திரமேரூரில் கள்ள ஓட்டை எதிர்த்துப் போராடி தனது வாக்கைப் பதிவு செய்திருக்கிறார் பார்வதி. அவரது துணிச்சல் மெச்சத்தக்கது. இவர்களைப் போன்றவர்களால்தான் ஜனநாயக மாண்புகள் உயிர்த்திருக்கின்றன. இன்னும் கள்ள ஓட்டுக் கலாச்சாரம் தொடர்வது தமிழகத்தின் அவலம்.இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.

Views: - 276

0

0