‘நம் பிள்ளைகளுக்கு நற்கல்வி தந்து சான்றோர்களாக உருவாக்குவது நல் ஆசிரியர்கள்தான்’ : நம்மவரின் ஆசிரியர் தின வாழ்த்து..!

5 September 2020, 12:50 pm
kamal-updatenews360
Quick Share

சென்னை : நாடு முழுவதும் ஆசிரியர் தினம் இன்று கொண்டாடப்பட்டு வரும் நிலையில், மக்கள் நீதி மய்யத்தின் தலைவரும், நடிகருமான கமல்ஹாசன் வாழ்த்து தெரிவித்துள்ளார்.

முன்னாள் குடியரசு தலைவரும், பேராசிரியருமான சர்வபள்ளி ராதாகிருஷ்ணனின் 132வது பிறந்த நாள் இன்று கொண்டாடப்பட்டு வருகிறது. அவரது பிறந்த நாளை நாடு முழுவதும் ஆசிரியர் தினமாக கொண்டாடப்பட்டு வருகிறது.

இதையொட்டி, பிரதமர் மோடி,முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி உள்பட பல்வேறு அரசியல் தலைவர்கள் ஆசிரியர் தின வாழ்த்துக்களை தெரிவித்துள்ளன.

அந்த வகையில், மக்கள் நீதி மய்யத்தின் தலைவர் கமல்ஹாசனும் ஆசிரியர் தின வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள வாழ்த்துச் செய்தியில், ” நாளைய தமிழகத்தின் நம்பிக்கையாம் நம் பிள்ளைகளுக்கு நற்கல்வி தந்து சான்றோர்களாக உருவாக்குவது நல் ஆசிரியர்கள்தான். அவர்களை இன்றும் என்றும் நினைவில் கொண்டு வாழ்த்துவோம். போற்றுவோம்,” எனக் குறிப்பிட்டுள்ளார்.

Views: - 6

0

0