மோடியையும் நிர்மலா சீதாராமனையும் புகழ்ந்து தள்ளிய கமல் ஹாசன்…!

26 March 2020, 6:21 pm
Quick Share

சீனாவில் உருவெடுத்த கொரோனா வைரஸால் இந்தியா உட்பட பல நாடுகளில் பிணங்கள் குவிந்த வண்ணம் உள்ளன. இந்த சூழ்நிலையிலிருந்து இந்தியாவை காக்க பிரதமர் மோடி இந்திய மக்களை அடுத்த 21 நாட்களுக்கு ஊடரங்கை மேற்கொள்ளுமாறு கேட்டுக்கொண்டார். மேலும் இந்த விதியினை மீறினால் கடும் தண்டனைக்கு உள்ளாவீர்கள் என்று பல மாநிலங்கள் அறிவித்திருந்தது.


இந்நிலையில் பொருளாதார சிக்கலையும் வறுமைக்கோட்டிற்கு கீழே இருப்பவர்களையும் ஊக்குவிக்கும் வகையில் இந்திய பொருளாதார அமைச்சரான நிர்மலா சீதாராமன் சில அறிவிப்புகளை இன்று அறிவித்துள்ளார்.

  1. PM கரீப் கல்யாண் திட்டம் மூலம் உணவிற்கு 1.7 லட்சம் கோடி ஒதுக்குதல்.
  2. இது பணம் பரிமாற்றத்திற்கும் உணவு பாதுகாப்பிற்குமான செலவும் அடங்கும்
  3. கொரோனா போராட்டத்தில் ஈடுப்படும் துப்புரவு பணியாளர்கள், மருத்துவர்கள், செவிலியர்கள், ASHA பணியாளர்கள் உள்ளிட்டோருக்கு 50 லட்சம் ரூபாய் வரை இன்சூரன்ஸ் எடுக்க வசதிகள் செய்துத்தரப்படும்.
  4. 80 கோடி மக்களுக்கும் ஒவ்வொரு நபருக்கு தலா ஒரு கிலோ அரிசி, கோதுமைகள் வழங்கப்படும்.
    இதற்கு முன் இந்திய பிரதமராகிய நரேந்திர மோடியின் திட்டத்தை கடுமையாக விமர்சித்த மக்கள் நீதி மையம் தலைவர் கமல் ஹாசன், தற்போது அறிவிக்கப்பட்ட திட்டங்கள் அனைத்தும் பாராட்டப்படுபனவாகுமென்று இணையதளத்தில் பகிர்ந்துள்ளார்.