ஏலம் போட்டு தமிழ்நாட்டை விற்பவர்களுக்கும் பரிசு காத்திருக்கிறது : கமல்ஹாசன் ட்வீட்….!!!

Author: Aarthi
14 October 2020, 10:56 am
kamal-haasan - updatenews360
Quick Share

சென்னை: ஏலம் போட்டு தமிழ்நாட்டை விற்பவர்களுக்கும் விரைவில் ‘பரிசு’ காத்திருக்கிறது என கமல்ஹாசன் தனது டுவிட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.

கடந்த திங்கள்கிழமை அன்று பொருளாதாரத்திற்கான நோபல் பரிசு பால் ஆர். மில்கிரோம் மற்றும் ராபர்ட் பி. வில்சன் ஆகிய இரண்டு பேருக்கு, ஏலக் கோட்பாட்டின் மேம்பாடுகள் மற்றும் புதிய ஏல வடிவங்களின் கண்டுபிடிப்புகளுக்காக அறிவிக்கப்பட்டது.

இந்நிலையில் மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவர் கமல்ஹாசன் தனது ட்விட்டர் பக்கத்தில் பொருளாதாரத்திற்கான நோபல் பரிசு அறிவிக்கப்பட்டதை குறிப்பிட்டு, ஏலமிடும் முறையை ஆய்வு செய்த இரு அமெரிக்க அறிஞர் பெருமக்களுக்கு நோபல் பரிசு அறிவிக்கப்பட்டுள்ளது.

ஏலம் போட்டு தமிழ்நாட்டை விற்பவர்களுக்கும் விரைவில் ‘பரிசு’ காத்திருக்கிறது என்று பதிவிட்டுள்ளார்.

Views: - 38

0

0