காஞ்சிபுரம் ; காஞ்சிபுரம் அருகே உயர் ரக பைக்கில் பட்டாக்கத்தியுடன் இரண்டு இளைஞர்கள் வந்து அடுத்தடுத்த வீடுகளில் கொள்ளையடித்து செல்லும் காட்சி வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
காஞ்சிபுரம் ஒன்றியத்துக்குட்பட்ட திம்மசமுத்திரம் ஊராட்சியில் புதிய குடியிருப்பு பகுதிகளான ஜினகாஞ்சி நகர் பகுதியில் அடுத்தடுத்த வீடுகளில் மர்ம நபர்கள் கொள்ளையடித்துச் சென்ற சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தின.
அருள்குமார் என்பவர் மின்சாரத்துறை போர்மேனாக பணியாற்றி வருகிறார். அவர் மனைவி கல்பனா அரசு பள்ளி ஆசிரியராக பணியாற்றி வருகிறார். ஜின காஞ்சி நகர் பகுதியில் வாடகை வீட்டில் வசித்து வருகிறார்கள். கடந்த வியாழன் அன்று குலதெய்வம் வழிபாட்டுக்காக சொந்த ஊரான ஆரணிக்கு சென்று வீடு திரும்பிய போது, வீட்டின் முன்பு தெரு விளக்கு போடப்பட்டிருந்தது.
இந்த நிலையில், அவை நிறுத்தி இருப்பதும் முன் கேட்டின் பூட்டு உடைக்கப்பட்டு கதவு திறந்து கிடப்பதை பார்த்து அதிர்ச்சியுற்று உள்ளே சென்று பார்க்கையில், சுமார் இரண்டு லட்ச ரூபாய் மதிப்புள்ள தங்க நகை மற்றும் வெள்ளி நகைகள் திருடு போனது தெரியவந்தது.
அதேபோல், பக்கத்து வீட்டில் குடியிருக்கும் மாரியப்பன் என்பவரின் வீட்டின் பூட்டை உடைத்து சுமார் ஒரு லட்ச ரூபாய் மதிப்புள்ள தங்கம் மற்றும் வெள்ளி நகைகளும், ஒரு லட்ச ரூபாய் ரொக்க பணமும் பறிபோனது தெரியவந்தது.
இதனையடுத்து இரு வீட்டாரும் பாலுசெட்டிசத்திரம் காவல் நிலையத்தில் புகார் மனு அளித்தனர். புகாரை பெற்றுக் கொண்ட காவல்துறையினர் அப்பகுதியில் உள்ள கண்காணிப்பு கேமராக்களை ஆய்வு செய்ததில் பட்டா கத்தியுடன் ஒரே பைக்கில் இரண்டு இளைஞர்கள் வந்து கைவரிசை செய்தது கண்டறியப்பட்டது. கொள்ளையில் ஈடுபட்ட மர்ம நபர்களை பிடிக்க காவல்துறையினர் முடுக்கி விடப்பட்டுள்ளனர்.
ஒரே நேரத்தில் அடுத்தடுத்து இரண்டு வீடுகளில் திருட்டு சம்பவம் நடைபெற்று வந்த நிலையில் அங்கு இருக்கும் சிசிடிவி காட்சி மூலம் விலை உயர்ந்த R15 பைக்கில் வந்து இரண்டு இளைஞர்கள் கையில் பட்டாக்கத்தி மற்றும் கடப்பாறையை கொண்டு வீடு புகுந்து கொள்ளை அடித்த சிசிடிவி காட்சி பரபரப்பை ஏற்படுத்தியது.
அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள அறிக்கையில், தமிழ்நாட்டிற்கு வாய்த்திருக்கும் முதலமைச்சர், எப்படிப்பட்ட பொம்மை முதலமைச்சர் என்பதற்கு இன்று அவர்…
விருதுநகர் மாவட்டம் காரியாபட்டியில் நடைபெற்ற தமிழக மக்கள் உரிமை மீட்பு பயணம் நிகழ்ச்சியின்போது பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் செய்தியாளர்களை…
கரூர் கூட்ட நெரிசலில் உயிரிழந்த 39 பேருக்கு எப்படி இரவில் பிரேத பரிசோதனை செய்ய முடியும், 6 மணிக்கு மேல்…
கோவை விமான நிலையத்திற்கு வந்த காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்த செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது. இன்று மீண்டும் கரூர்…
கரூர் வேலாயுதம்பாளையத்தில் த.வெ.க. சார்பில் நடைபெற்ற பிரசார கூட்டத்தில், கட்சித் தலைவர் விஜய் பங்கேற்று உரையாற்றிய போது ஏற்பட்ட கூட்ட…
நடிகர் விஜய் தமிழக வெற்றிக் கழகம் என்ற கட்சியை தொடங்கி 2026 தேர்தலில் போட்டியிடுவோம் என அறிவித்தார். அதன்படி முதல்…
This website uses cookies.