பேருந்துகளின் படிக்கட்டுகளில் மாணவர்கள் தொங்காமல் செல்ல படிக்கட்டுகளின் அருகில் உள்ள ஜன்னல் கம்பிகளை தகரம் வைத்து மூடிய போக்குவரத்து கழக அதிகாரிகள் புதிய முயற்சி கைகொடுக்குமா..? என்று எதிர்பார்க்கப்படுகிறது.
தமிழக முழுவதும் பள்ளி மாணவர்கள் கல்வி கற்கும் வகையில் அவர்களுக்கு இலவச பயண பேருந்து அட்டை அளித்து கிராமப்புற மாணவர்களும் நகரத்தில் சென்று கல்வி கற்க வேண்டும் என்ற எண்ணத்தில் அதிமுக ஆட்சி காலத்தில் மாணவ, மாணவிகளுக்கு இலவச பேருந்து பயண அட்டைகள் அளித்து வசதிகள் ஏற்படுத்தப்பட்டது.
இந்த நிலையை சற்றும் உணராமல் பள்ளி மாணவர்கள் விளையாட்டுத்தனமாக பேருந்து படிக்கட்டுகளில் ஆபத்தான முறையில் பயணம் செய்து, அவ்வப்போது விபத்துகளில் சிக்கி உடல் உறுப்புகளையும், சில சமயம் உயிரிழப்பையும் சந்திக்கும் நிலை தமிழகத்தில் தொடர்ந்து அதிகரித்து வருகிறது.
இந்நிலையில், இது போன்ற பயண நேரத்தில் விபத்துக்களை தவிர்க்க தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகம் காஞ்சிபுரம் பணிமனையில் இயக்கப்படும் நகரப் பேருந்துகளின் முன்பக்கம் மற்றும் பின்பக்க படிக்கட்டுகளின் இரு பகுதிகளிலும் தகரம் கொண்டு அடைத்து, மாணவர்களோ, இளைஞர்களோ இச்செயலில் ஈடுபடாத வண்ணம் பரிசோதனை ஓட்டம் சில பேருந்துகளில் நடைபெற்றது.
படியில் ஏறி உள்ளே செல்லும் வகையில் மட்டுமே இனி இருக்கும் என்பதால் விபத்துக்கள் குறையும் என்பதும், இதன் பிறகு மாணவர்கள் தங்கள் உயிரின் மதிப்பை அறிந்து படிக்கட்டு பயணத்தை தவிர்க்க வேண்டும் என்பதே அனைவரின் எண்ணமாக உள்ளது. இதற்கு பொதுமக்களிடமிருந்து வரவேற்பு கிடைத்தால் மட்டுமே மற்ற பேருந்துகளில் தகரம் அடித்து மாணவர்கள் கம்பிகளை பிடித்து தொங்காத அளவுக்கு நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என ஓட்டுனர்கள் தெரிவிக்கின்றனர்.
மழைநீர் தேங்கியுள்ள பகுதியில் புல்டோஸ்ஸர் மூலம் தண்ணியை வாரி அடுத்த பகுதிக்கு ஊற்றிய அவலம் போலவே இச்செயலும் தெரிகின்றது என சமூக ஆர்வலர்கள் தெரிவிக்கின்றன.
மேலும், தகரம் அடித்து கம்பிகளை மூடினால் கூட படிக்கட்டில் நின்று கொண்டே பயணம் செய்வார்கள். அப்போதும் விபத்துக்கள் ஏற்படும். இதற்கு நிரந்தர தீர்வு காணும் வேண்டும் எனில் இரண்டு படிக்கட்டுகளிலும் கதவுகளை வைத்தால் மட்டுமே இதற்கு நிரந்தரமான தீர்வு காணப்படும் என கூறினர்.
அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள அறிக்கையில், தமிழ்நாட்டிற்கு வாய்த்திருக்கும் முதலமைச்சர், எப்படிப்பட்ட பொம்மை முதலமைச்சர் என்பதற்கு இன்று அவர்…
விருதுநகர் மாவட்டம் காரியாபட்டியில் நடைபெற்ற தமிழக மக்கள் உரிமை மீட்பு பயணம் நிகழ்ச்சியின்போது பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் செய்தியாளர்களை…
கரூர் கூட்ட நெரிசலில் உயிரிழந்த 39 பேருக்கு எப்படி இரவில் பிரேத பரிசோதனை செய்ய முடியும், 6 மணிக்கு மேல்…
கோவை விமான நிலையத்திற்கு வந்த காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்த செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது. இன்று மீண்டும் கரூர்…
கரூர் வேலாயுதம்பாளையத்தில் த.வெ.க. சார்பில் நடைபெற்ற பிரசார கூட்டத்தில், கட்சித் தலைவர் விஜய் பங்கேற்று உரையாற்றிய போது ஏற்பட்ட கூட்ட…
நடிகர் விஜய் தமிழக வெற்றிக் கழகம் என்ற கட்சியை தொடங்கி 2026 தேர்தலில் போட்டியிடுவோம் என அறிவித்தார். அதன்படி முதல்…
This website uses cookies.