திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலில் இன்று தொடங்கியது கந்தசஷ்டி திருவிழா…!!

15 November 2020, 10:40 am
thirucehndthur - updatenews360
Quick Share

திருச்செந்தூர்: திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலில் கந்தசஷ்டி திருவிழா இன்று யாகசாலை பூஜையுடன் தொடங்கியது.

முருக பெருமானின் அறுபடை வீடுகளில் 2ம் படை வீடான திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலில் ஆண்டுதோறும் நடைபெறும் பல்வேறு விழாக்களில் கந்தசஷ்டி திருவிழா மிகவும் சிறப்பு வாய்ந்தது ஆகும். இந்த ஆண்டு கந்தசஷ்டி திருவிழா இன்று காலை யாகசாலை பூஜையுடன் தொடங்கியது. அதிகாலை 1 மணி அளவில் நடை திறக்கப்பட்டு பூஜைகள் நடைபெற்றது.

1ம் திருநாள் முதல் 5ம் திருநாள் வரையிலும் மாலையில் தங்கத்தேரில் சுவாமி கிரிப்பிரகாரத்தில் வீதி உலா செல்வதற்கு பதிலாக, சுவாமி-அம்பாள்களுடன் சப்பரத்தில் எழுந்தருளி, உள்பிரகாரத்தில் வலம் வந்து பக்தர்களுக்கு காட்சி அளிக்கிறார். சூரசம்ஹாரம், 6ம் திருநாளான வருகிற 20ந்தேதி நடைபெறுகிறது.

7ம் திருநாளான 21ந்தேதி இரவில் சுவாமிக்கும், தெய்வானை அம்பாளுக்கும் திருக்கல்யாணம் நடைபெறுகிறது. கொரோனா தடுப்பு நடவடிக்கை காரணமாக, 6, 7ம் திருநாள்களில் சாமி தரிசனம் செய்வதற்கு பக்தர்களுக்கு அனுமதி இல்லை. மற்ற விழா நாட்களில் தினமும் 10 ஆயிரம் பக்தர்கள் சாமி தரிசனத்துக்கு அனுமதிக்கப்படுகின்றனர். கோவில் வளாகம், மண்டபம், விடுதிகளில் தங்குவதற்கும், விரதம் இருப்பதற்கும் பக்தர்களுக்கு அனுமதி இல்லை என அறிவிக்கப்பட்டுள்ளது.

விழா நிகழ்ச்சிகள் அனைத்தும் https://www.youtube.com/channel/UCDiavBtRKei0x1fYVup\Ew/live என்ற இணையதளத்தில் நேரலையாக காண ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. விழா ஏற்பாடுகளை கோவில் தக்கார் இரா.கண்ணன் ஆதித்தன், கோவில் இணை ஆணையர் கல்யாணி மற்றும் பணியாளர்கள் செய்து வருகின்றனர்.

Views: - 53

0

0