கஞ்சா போதையில் 4 வயது மகளை பலாத்காரம் செய்த தந்தை : தாயின் துணையோடு ஒரு மாதம் நடந்த கொடூரம்..!!

Author: Babu Lakshmanan
16 May 2022, 4:44 pm
Quick Share

கஞ்சா போதையில் 4வது சிறுமியான மகளை பாலியல் வன்கொடுமை செய்த தந்தையை போஸ்கோ சட்டத்தின்கீழ் வழக்குப்பதிவு செய்து காவல்துறையினர் தேடி வந்த நிலையில், தற்போது கைது செய்யப்பட்டுள்ளார். 

திருவாரூர் மாவட்டம் நெடுங்குடி கிராமம் மில்லு தெருவை சேர்ந்த 35 வயதான ராஜேந்திரன். இவர் மனைவி மற்றும் குழந்தைகளுடன் இந்தப் பகுதியில் வசித்து வருகிறார். இவருக்கு ஆறு வயதில் ஒரு மகனும், நான்கு வயதில் ஒரு மகளும் உள்ளனர். ராஜேந்திரன் கோவில் சிற்ப வேலையில் ஈடுபடுபவர்களுக்கு உதவியாளராக வேலை பார்த்து வருகிறார். ராஜேந்திரன் மது மற்றும் கஞ்சா பழக்கம் உள்ளவர் என்று கூறப்படுகிறது.

இந்த நிலையில், ராஜேந்திரன் கஞ்சா போதையில் தனது 4 வயது மகளை கடந்த ஒரு மாத காலமாக பாலியல் வன்கொடுமை செய்து வந்ததாக கூறப்படுகிறது. இதற்கு ராஜேந்திரனின் மனைவியும் உடந்தையாக இருந்ததாக கூறப்படுகிறது. ராஜேந்திரன் மனைவி வீட்டில் இல்லாத போது குழந்தையின் அழுகுரல் சத்தம் அடிக்கடி கேட்பதை கவனித்த அக்கம்பக்கத்தினர் இதுகுறித்து உள்ளூரில் உள்ள ஒரு பெண் சமூக ஆர்வலரிடம் தெரிவித்துள்ளனர். 

இதனையடுத்து, அவர் குழந்தை உதவி மையத்திற்கு தகவல் அளித்ததன் அடிப்படையில் அவர்கள் வந்து சிறுமியை பரிசோதித்த போது சிறுமி உடலில் காயங்கள் இருந்ததாலும், சிறுமி உடல் நிலை பாதிக்கப்பட்டு இருந்ததாலும், அவரை மீட்டு திருவாரூர் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் அனுமதித்தனர். 

பெற்ற மகளையே ராஜேந்திரன் பாலியல் வன்கொடுமை செய்த சம்பவம் என்பது அப்பகுதியில் மிகுந்த அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இதுகுறித்து திருவாரூர் அனைத்து மகளிர் காவல் நிலையத்தினர் ராஜேந்திரன் மீது போக்சோ சட்டத்தின்கீழ் வழக்குப்பதிவு செய்து தலைமறைவான அவரை தேடி தேடிவந்த நிலையில், இன்று காலை ராஜேந்திரன் கைது செய்யப்பட்டுள்ளார்.

இந்த வழக்கில் கணவருக்கு உடந்தையாக இருந்த ராஜேந்திரன் மனைவி மீதும் வழக்கு பதிவு செய்ய வேண்டும் என சமூக ஆர்வலர்கள் கோரிக்கை வைக்கின்றனர். 

Views: - 685

0

0