குமரியில் தனியாருக்கு சொந்தமான பகுதியில் திடீர் தீவிபத்து : 2 லட்சம் மதிப்பிலான படகுகள் எரிந்து சேதம்

4 March 2021, 8:39 pm
Kumari - updatenews360
Quick Share

கன்னியாகுமரி : தேங்காய்பட்டிணம் மீன்பிடி துறைமுகத்தில் தனியாருக்கு சொந்தமான இடத்தில் திடீரென தீ பிடித்ததில் 2 லட்சம் மதிப்பிலான நாட்டுபடகுகள் எரிந்து சேதமடைந்தன.

கன்னியாகுமரி மாவட்டம் தேங்காய் பட்டிணம் மீன்பிடி துறைமுகத்திற்கு அருகில் தனிநபருக்கு சொந்தமான நிலம் ஒன்று பராமரிப்பு ஏதும் இல்லாமல் புற்கள் மண்டி உள்ளது. இந்த இடத்தில் துறைமுகத்தில் மீன்பிடி தொழில் செய்யும் மீனவர்கள் தங்களது படகுகளை பாதுகாப்பாக நிறுத்துவதற்காக பயன்படுத்தி வந்துள்ளனர்.

இந்த நிலையில், நேற்று இரவு திடீரென அந்த பகுதியில் தீ பிடித்து எரிந்தது. அந்த பகுதியில் பாதுகாப்பாக நிறுத்தி வைக்கப்பட்டிருந்த படகுகளிலும் தீ பிடித்து எரிந்தது. உடனே அருகில் இருந்தவர்கள் தீயை அணைக்க முயன்றும் முடியாததால் குழித்துறை தீ அணைப்பு துறையினருக்கு தகவல் கொடுத்துள்ளனர். தகவல் அறிந்து சம்பவ இடம் விரைந்து வந்த தீ அணைப்பு துறையினர் சாமர்த்தியமாக செயல்பட்டு தீயை மேலும் பரவாமல் தடுத்தனர்.

இதில் சுமார் 2 லட்சம் மதிப்பிலான இரண்டு படகுகள் எரிந்து சாம்பலாகின. இந்த படகுகள் யாருடையது என்பது தெரியாமல் உள்ளது. திடீரென பற்றி எரிந்த தீயால் அந்த பகுதியை சுற்றி உள்ள மக்கள் மிகுந்த அதிர்ச்சியில் உள்ளனர். மேலும் இந்த தீ சிறிது தூரம் கூட பரவி இருந்தால் துறைமுகத்தில் நிறுத்தி வைத்திருந்த அனைத்து படகுகளும் எரிந்து சாம்பலாகி இருக்கும். காரணம் அனைத்து படகுகளிலும் பெட்ரோல் மற்றும் டீசல்கள் நிரப்பி
வைத்திருந்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Views: - 3

0

0