நிலைதடுமாறிய இருசக்கர வாகனம்… தூக்கி வீசப்பட்ட கண் மருத்துவர்.. கோர சம்பவத்தின் அதிர்ச்சி சிசிடிவி காட்சி..!!

18 June 2021, 3:54 pm
accident - updatenews360
Quick Share

கன்னியாகுமரி : குமரியில் இருசக்கர வாகனம் நிலைதடுமாறி தூக்கி வீசப்பட்ட விபத்தில் கண் மருத்துவர் சம்பவ இடத்திலேயே பலியான சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

குமரி மாவட்டம் கருங்கல் அருகே தெருவுக்கடை பகுதியை சேர்ந்தவர் ஜாபர் (24). இவர் களியக்காவிளை பகுதியில் உள்ள ஒரு தனியார் கண் மருத்துவமனையில் மருத்துவராக பணிபுரிந்து வருகிறார்.

மருத்துவமனையில் வேலை முடிந்ததும் தனது இருசக்கர வாகனத்தில் வீட்டிற்கு சென்று கொண்டிருந்த போது திருத்துவபுரம் பகுதியில் உள்ள அபாயகரமான வளைவில், கட்டுப்பாட்டை இழந்த இருசக்கர வாகனம் நிலைதடுமாறி சாலையில் தூக்கி வீசப்பட்டது. இதில் மருத்துவர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார் .

இந்த விபத்து நடந்த இடத்தில் இருந்த சிசிடிவி கேமராவில் இது குறித்த வீடியோ பதிவாகி இருந்தது. தற்போது இந்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி பரவி வருகிறது.

மேலும் விபத்து குறித்து தகவல் அறிந்து சம்பவ இடம் வந்த களியக்காவிளை போலீசார் மருத்துவரின் உடலை கைப்பற்றி குழித்துறை அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர்.

Views: - 248

1

0