இரண்டு பைக்குகள் நேருக்கு நேர் மோதல்: கண்ணிமைக்கும் நேரத்தில் நடந்த விபத்தில் ஒருவர் பலி!!

Author: Babu Lakshmanan
26 August 2021, 11:57 am
Quick Share

கன்னியாகுமரி: நாகர்கோவிலில் இரண்டு பைக்குகள் மோதியதில் ஒருவர் பலியானார். மற்றொருவர் படுகாயமடைந்தார்.

குமரி மாவட்டம் வெள்ளிசந்தை கட்டவிளை பகுதியை சேர்ந்தவர் மகேஷ் (32). இவர் நேற்று முன்தினம் இரவு பறக்கை பகுதியில் பைக்கில் சென்று கொண்டிருந்தார். அப்போது பின்னல் வேகமாக மற்றொரு பைக்கில் வந்த பறக்கையை சேர்ந்த அப்துல் அஜீஸ் (33) என்பவரும் கண்ணிமைக்கும் நேரத்தில் இரண்டு பைக்கும் மோதியது. இதில் மகேஷ் தூக்கி வீசப்பட்டு படுகாயமடைந்தார்.

அப்துல் அஜீஸ் சென்ற பைக், எதிரே வந்த மினிலாரி மீது மோதியது. இதில் அப்துல் அஜீசுக்கு லேசான காயம் ஏற்பட்டது. படுகாயத்துடன் உயிருக்கு போரடி கொண்டிருந்த மகேசை, அக்கம் பக்கத்தினர் மீட்டு சிகிச்சைக்காக ஆசாரிபள்ளம் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர்.

ஆனால் அவர் செல்லும் வழியிலேயே பரிதபமாக உயிரிழந்தார். இதுகுறித்து நாகர்கோவில் போக்குவரத்து புலனாய்வு பிரிவு போலீசார், அப்துல் அஜீஷ் மீது வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

Views: - 548

0

1