சொல்ல முடியாது… ஜனவரி, பிப்ரவரி மாதங்களுக்கும் கூட வரி போட்டுருவாங்க : சொத்து வரியை உயர்த்திய திமுக அரசு மீது பாஜக விமர்சனம்

Author: Babu Lakshmanan
19 April 2022, 1:42 pm
Quick Share

கன்னியாகுமரி : வரும் காலங்களில் ஜனவரி, பிப்ரவரி மாதத்திற்க்கும் திமுக அரசு வரி விதிக்கும் என கன்னியாகுமரியில் நடைபெற்ற போராட்டத்தில் பாஜக நிர்வாகி சுபாஷ் பேசியுள்ளார்.

சொத்துவரி, வீட்டுவரி, காலிமனை வரி உள்ளிட்ட வரி உயர்வுக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில் தமிழக அரசை கண்டித்து இன்று கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள பல்வேறு பேரூராட்சி அலுவலகம் முன்பு பாஜகவினர் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

அதேபோல் கன்னியாகுமரி பேரூராட்சி அலுவலகம் முன்பு நடைபெற்ற போராட்டத்தில் அகஸ்தீஸ்வரம் ஒருங்கிணைந்த ஒன்றிய பாஜக பார்வையாளர் சுபாஷ் கலந்து கொண்டு பேசியதாவது ;- உள்ளாட்சி தேர்தல் நிறைவுற்றவுடன் சொத்துவரி, வீட்டுவரி, காலி மனை வரிகளை திமுக அரசு உயர்த்தியுள்ளது. வாக்களித்த ஏழை மக்களுக்கு செய்யும் பச்சை துரோகம் .

காலிமனைக்கு வரி உயர்த்தியது போல் வரும் காலங்களில் ஜனவரி, பிப்ரவரி மாதத்திற்கும் திமுக அரசு வரி விதிக்கும் நிலை உருவாகும். அந்த அளவிற்கு வரி என்ற பெயர் எங்கிருந்தாலும் அதை உயர்த்த திமுக அரசு ஆர்வமாக உள்ளது. பொங்கல் பண்டிகைக்கு ரூ.5 ஆயிரம் வழங்குவோம் என திமுக அரசு தேர்தல் வாக்குறுதி அளித்தது.ஆனால் அதை வழங்காமல் தரமற்ற பொருட்களை வழங்கி பொதுமக்களை ஏமாற்றியது.

இதில் ஊழல் நடத்திருப்பதை உறுதிபடுத்தும் வகையில் தரமற்ற பொருட்கள் வழங்கியவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என ஸ்டாலின் அறிவித்திருந்தார். நடவடிக்கை எடுக்கப்படும் என்பது கானல் நீர் கதைதான் என்பதை மக்கள் அறிவார்கள்.இவ்வாறு அவர் பேசினார்.

கன்னியாகுமரி நகர அமைப்பாளர் கனகராஜ் தலைமையில் நடைபெற்ற இந்த போராட்டத்தில் பா.ஜ.க நிர்வாகிகள் தங்கதுரை, பால் சாமி, கன்னியம்மாள், இந்திரலேகா, இளையராஜா, செந்தில் சுரேஷ், கண்ணன், வெங்கடேஷ், அரிகரன், பாபு உட்பட பலர் பங்கேற்றனர்.

Views: - 811

0

0