இன்ஜின் கோளாறால் நடுக்கடலில் விசைப்படகில் தீ விபத்து : அதிர்ஷ்டவசமாக உயிர்தப்பிய 14 மீனவர்கள்!!

Author: Babu
4 August 2021, 10:59 am
boat fire - - updatenews360
Quick Share

கன்னியாகுமரி: சின்னமுட்டம் மீன்பிடி துறைமுகத்தில் மீன்பிடிக்க சென்ற விசைப்படகில் இன்ஜின் கோளாறால் ஏற்பட்ட தீ விபத்தில் படகு முழுவதும் எரிந்து எலும்பு கூடானது. இதில் மீன்பிடிக்க சென்ற 14 மீனவர்கள் பத்திரமாக கரை திரும்பினர்.

குமரி மாவட்டம் சின்னமுட்டம் மீன்பிடி துறைமுகத்தில் சுமார் 300க்கும் மேற்பட்ட விசைப்படகுகள் மீன்பிடி தொழிலில் ஈடுபட்டு வருகின்றனர். இதில் கன்னியாகுமரி ஹைகிரவுண்ட் பகுதியை சேர்ந்த சகாய ஆண்டனி (51) என்பவரது விசைப்படகில் 14 மீனவர்கள் நேற்று அதிகாலை 5 மணிக்கு கடலுக்கு மீன் பிடிக்க சென்றனர்.

பின்னர் மீன் பிடித்துக்கொண்டு நேற்றிரவு சின்னமுட்டம் மீன்பிடி துறைமுகத்திலிருந்து நான்கு நாட்டிகல் மைல் தொலைவில் கரை திரும்பிக் கொண்டிருந்தபோது, திடீரென இன்ஜினில் கோளாறு ஏற்பட்டு தீ பிடிக்க ஆரம்பித்துள்ளது. காற்றின் வேகம் அதிகமாக இருந்ததால் தீ மளமளவென எரிய தொடங்கியது. இதனையடுத்து விசைப் படகில் இருந்த மீனவர்கள் கடலில் குதித்து அருகில் வந்த விசைபடகில் ஏறி தப்பினர்.

மீனவர் வெளியேறிய சிறிது நேரத்தில் அவர்கள் கண்முன்பே விசைப்படகு முற்றிலும் எரிந்து எலும்புக்கூடாக மாறியது. இச் சம்பவத்தால் சின்னமுட்டம் மீன்பிடி துறைமுகத்தில் மீனவர்கள் யாரும் இன்று கடலுக்கு மீன்பிடிக்க செல்லவில்லை.

Views: - 396

0

0