குமரி வாக்குப்பதிவு மின்னணு இயந்திரங்கள் பாதுகாப்பு : ஆட்சியர் அரவிந்த் நேரில் சென்று ஆய்வு

7 April 2021, 12:51 pm
Kumari Voting machine 1- updatenews360
Quick Share

கன்னியாகுமரி : குமரி மாவட்டத்தில் நடந்த சட்டப்பேரவை தேர்தல் மற்றும் மக்களை இடைத்தேர்தலுக்கு பயன்படுத்தப்பட்ட வாக்குப்பதிவு இயந்திரங்களின் பாதுகாப்பு குறித்து ஆட்சியர் அரவிந்த் ஆய்வு மேற்கொண்டார்.

கன்னியாகுமரி மக்களவை இடைத்தேர்தல் மற்றும் சட்ட மன்ற பொது தேர்தலில் மாவட்டத்தில் ஆறு சட்டமன்ற தொகுதிகளிலும் 68.80 % வாக்குகள் பதிவாகியுள்ளது. மாவட்டம் முழுவதும் உள்ள 2,243 வாக்குச்சாவடிகளில் பயன்படுத்தப்பட்ட வாக்குப்பதிவு இயந்திரங்கள் அனைத்தும் நேற்று இரவு தொடங்கி இன்று அதிகாலை வரை நாகர்கோவில் கோணத்தில் உள்ள அரசு பொறியியல் கல்லூரிக்கு கொண்டு வரப்பட்டு மூன்று அடுக்கு பாதுகாப்புடன் வைக்கப்பட்டு உள்ளது. துப்பாக்கி ஏந்திய போலீசார் இரவு பகலாக சுழற்சி முறைகளில் கண்காணிப்பு பணிகளில் இன்று முதல் ஈடுபட்டு வருகின்றனர்.

கூடுதல் பாதுகாப்புக்காக வெப் கேமராக்கள் வசதிகளும் செய்யப்பட்டு உள்ளன. கோபுரங்கள் அமைக்கப்பட்டு அதிலும் போலீசார் கண்காணிப்பு பணிகளில் உள்ளனர். கோணத்தில் உள்ள அரசு பொறியியல் கல்லூரி இன்று முதல் முழுமையாக போலீசார் கட்டுப்பாட்டில் கொண்டுவரப்பட்டு உள்ளது. இதை மாவட்ட ஆட்சியர் அரவிந்த் இன்று நேரில் சென்று ஆய்வு செய்தார்.

Views: - 62

0

0