காதல் திருமணம் செய்த கல்லூரி மாணவி தீக்குளித்து சாவு : திருமணமாகிய 3 மாதங்களில் நிகழ்ந்த சோகம்…!!
Author: Babu Lakshmanan6 January 2022, 6:01 pm
photo of a fresh crime scene
கன்னியாகுமரி : கன்னியாகுமரி அருகே காதல் திருமணம் செய்த கல்லூரி மாணவி தீக்குளித்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
நாகர்கோவிலை அடுத்த மறவன் குடியிருப்பு பகுதியை சேர்ந்தவர் சார்லட். இவரது மகள் லிசா (வயது 19). இவர் அப்பகுதியில் உள்ள ஒரு தனியார் கல்லூரியில் பி.எஸ்.சி. 3ம் ஆண்டு படித்து வந்தார். அப்போது, அப்பகுதியில் உள்ள ஆம்புலன்ஸ் ஓட்டுனர் விஷ்ணு என்ற வாலிபருடன் காதல் மலர்ந்தது.
இவர்கள் கடந்த 3 மாதங்களுக்கு முன்பு பெற்றோரின் அனுமதியின்றி அவரை திருமணம் செய்து கொண்டு, மார்த்தாண்டம் பகுதியில் வாடகை வீட்டில் வசித்து வந்தார்.
இந்நிலையில் கணவர் விஷ்ணுவுடன் அவருக்கு கருத்து வேறுபாடு ஏற்பட்டது. திடீரென கடந்த 30-ந்தேதி லிசா தீக்குளித்தார். அவரது அலறல் சத்தத்தை கேட்ட அக்கம்பக்கத்தினர் அவரை மீட்டு ஆம்புலன்ஸ் மூலம் ஆசாரிப்பள்ளம் மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சேர்த்தனர்.அங்கு சிகிச்சை பலனின்றி இன்று காலை அவர் பரிதாபமாக உயிர் இழந்தார். இது குறித்து மார்த்தாண்டம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
0
0