கன்னியாகுமரி : குளச்சல் நகராட்சியில் போட்டி திமுக உறுப்பினர் பதவியேற்க ஆதரவாக செயல்பட்ட குளச்சல் காங்கிரஸ் எம்எல்ஏவின் கொடும்பாவியை திமுகவினர் எரிக்க முயன்ற சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
கன்னியாகுமரி மாவட்டத்தில் குளச்சல் நகராட்சியை திமுக மீனவ வேட்பாளரன ஜான்சன் சார்லஸ் என்பவருக்கு ஒதுக்கப்பட்ட நிலையில், அங்கு திமுக போட்டி வேட்பாளர் நசீர் என்பவர் பாஜக மற்றும் அதிமுக ஆதரவுடன் வெற்றி பெற்றார். 24 வார்டுகள் உள்ள குளச்சல் நகராட்சியில் இருவரும் 12 வார்டுகள் வீதம் பெறவே, குலுக்கல் மூலம் நசீர் வெற்றி பெற்று தலைவராக பொறுப்பேற்று கொண்டார்.
இந்த நிலையில், நசீர் தலைவரானதற்கு எதிர்ப்பு தெரிவித்தும், இதற்கு ஆதரவாக செயல்பட்ட குளச்சல் சட்டமன்ற உறுப்பினர் பிரின்ஸை கண்டித்தும் குளச்சலில் மீனவ மக்கள் கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
போராட்டத்தின் போது எம்எல்ஏ பிரின்ஸின் கொடும்பாவியை எரித்து கடலில் வீச மீனவர்கள் முயன்றனர். இதனை போலீசார் தடுத்த நிலையில், அந்த பகுதியில் மீனவர்களுக்கும், போலீசாருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது இதனால் அந்த பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.
விசிக கட்சி திருச்சியில் மே-31 நடத்த உள்ள "மதசார்பின்மை காப்போம்" என்ற பேரணி குறித்து வேலூர்,88o திருப்பத்தூர், ராணிப்பேட்டை,9 திருவண்ணாமலை…
பகல்காம் தாக்குதலை தொடர்ந்து பாகிஸ்தானுக்கு இந்தியா பதிலடி கொடுத்தது. ஆபரேஷன் சிந்தூர் என்ற பெயரில் இந்தியா, பாகிஸ்தானில் உள்ள 9…
அரசியல்வாதி பிரகாஷ் ராஜ் பிரகாஷ் ராஜ் சமீப காலமாகவே பாஜவை விமர்சித்தே பேசி வருகிறார். கடந்த 2019 ஆம் ஆண்டு…
இந்தியா - பாகிஸ்தான் போர் பதற்றம் காரணமாக ஐபிஎல் போட்டிகள் நிறுத்தப்படடன. கடந்த மார்ச் 22ஆம் தேதி தொடங்கிய ஐபிஎல்…
பணத்தாசை பிடித்த இளையராஜா! தனது அனுமதி இல்லாமல் தனது பாடல்களை திரைப்படங்களில் பயன்படுத்தினால் நஷ்டஈடு கேட்பது இளையராஜாவின் வழக்கம். இது…
மதுரை விளாங்குடி பகுதியில் அதிமுக முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜு தலைமையில் விளாங்குடி பகுதிசெயலாளர் ஏற்பாட்டில் பொதுமக்களுக்கு நீர்-மோர் பந்தல்…
This website uses cookies.