‘கஞ்சாவ வாங்கிட்டு பணம் கொடுக்கல.. அதா கொன்னோம்’ ; இரட்டைக்கொலை குற்றவாளிகள் அதிர்ச்சி வாக்குமூலம்..!!

Author: Babu Lakshmanan
26 June 2021, 12:52 pm
kumari - kanja arrest - updatenews360
Quick Share

கன்னியாகுமரி : கஞ்சாவை பெற்றுக்கொண்டு பணம் தர மறுத்ததால் கத்தியால் குத்தி கொலை செய்தோம் என கொலையாளிகள் அளித்த வாக்குமூலம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

கன்னியாகுமரி அருகே சுனாமி காலனி பகுதியை சேர்ந்தவர் ஜேசுராஜன் (24). குண்டல் பகுதியை சேர்ந்த செல்வின் என்பவரும் கன்னியாகுமரி முருகன் குன்றம் பகுதியில் முட்புதருக்குள் கத்தியால் குத்தி கொலை செய்யப்பட்டு கிடந்தனர். மேலும், அவர்களுடன் சுனாமி காலனியை சேர்ந்த ஜெனிஸ் (26) வயிற்றில் கத்திக்குத்துடன் உயிருக்கு போராடிய நிலையில் கிடந்தார்.

சம்பவம் அறிந்த போலீசார் அங்கு சென்று உயிருக்கு போராடிய நிலையில் இருந்த ஜெனிஸை மீட்டு ஆசாரிபள்ளம் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுமதித்தனர். தொடர்ந்து சம்பவ இடம் சென்று ஆய்வு செய்த மாவட்ட எஸ்.பி.பத்ரிநாராயணன், கொலை சம்பவம் குறித்து விசாரித்து கொலையாளிகளை கைது செய்ய , 6 தனிப்படை அமைக்க உத்தரவிட்டிருந்தார்.

பின்னர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த ஜெனிஸை போலீசார் விசாரித்தனர். அப்போது அவர் நாங்கள் மூன்று பேரும் முருகன் குன்றம் அருகில் காட்டு பகுதியில் மது அருந்தி கொண்டிருந்தோம். திடிரென பூட்புதருக்குள் இருந்து வெளியே வந்த இரண்டு பேர் எங்கள் மூவரையும் கத்தியால் சராமரியாக குத்தினர். அவர்கள் யார் என்று எனக்கு அடையாளம் தெரியாது, என கூறினார்.

இதனையடுத்து, கொலையாளிகள் இருவரையும் பிடிக்க போலீசார் தீவிர முயற்சியில் ஈடுபட்டனர்.ஊரடங்கு என்பதால் பஸ் போக்குவரத்து இயங்கவில்லை. இதனால் கொலையாளிகள் வெளியூர் செல்ல வாய்ப்பில்லை என்று சந்தேக கோணத்தில் விசாரிக்க தொடங்கினர். பின்னர் விசாரணையை துரிதபடுத்திய போலீசார் 7 பேரை சந்தேகத்தின் அடிப்படையில் பின் தொடர ஆரம்பித்தனர். இதில் இருவர் அகஸ்தீஸ்வரம் சுற்றுவட்டார காட்டுப்பகுதியில் சுற்றி திரிவாக தகவல் கிடைத்தது. இதனையடுத்து இருவரையும் கைது செய்து போலீசார் விசாரணை நடத்தினர்.

விசாரணையில் அகஸ்தீஸ்வரம் தெற்கு சாலையே சேர்ந்த தங்கசாமி என்பவரது மகன் பாக்கியஸ்வரன் மற்றும் அதே பகுதியை சேர்ந்த முத்துகுமார் என்பது தெரியவந்தது. இவர்கள் இருவரும் அப்பகுதியில் கஞ்சா வியாபாரம் செய்து வந்துள்ளனர். இவர்கள் கொலை செய்யப்பட்ட மூன்று பேருக்கும் மூன்று நாட்களுக்கு முன்பு கஞ்சா விற்பனை செய்துள்ளனர்.

அப்போது கஞ்சாவை வாங்கிய ஜேசுராஜன் மற்றும் செல்வின் கஞ்சாவை பெற்றுக்கொண்டு பணம் கொடுக்காமல் அவர்களின் இருசக்கர வாகனத்தை பறிமுதல் செய்து தகராறு செய்துள்ளனர். இதனால் ஆத்திரமடைந்த முத்துகுமார் மற்றும் பாக்கியஸ்வரன் நேற்று முன்தினம் முருகன் குன்றம் காட்டுப்பகுதியில் ஜேசுராஜனும் செல்வினும் மது அருந்துவதை அறிந்து, அங்கு சென்று தாங்கள் மறைத்து வைத்திருந்த கத்தியால் அவர்கள் இருவரையும் சராமரியாக குத்திக்கொலை செய்துள்ளனர்.

கஞ்சா விற்பனை தகராறில் இரு இளைஞர்கள் கொலை செய்யப்பட்ட சம்பவம் கன்னியாகுமரி வட்டாரத்தில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

Views: - 446

0

0