100 நாள் வேலைத் திட்டத்தை எதிர்ப்பதா..? சீமான், கமலை கண்டித்து விவசாய தொழிலாளர் சங்கத்தினர் போராட்டம்

Author: Babu Lakshmanan
6 October 2021, 8:02 pm
Kumari protest 1- updatenews360
Quick Share

கன்னியாகுமரி: 100 நாள் வேலை வாய்ப்பு திட்டத்தை கொச்சைப்படுத்தி பேசியதாக நாம் தமிழர் கட்சி தலைவர் சீமான் மற்றும் மக்கள் நீதி மைய கட்சியின் தலைவர் கமல்ஹாசன் அகியோரை கண்டித்து நைனா புதூர் பகுதியில் விவசாய தொழிலாளர்கள் சங்கம் சார்பில் இன்று ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

100 நாள் வேலைவாய்ப்பு திட்டத்தையும், அதில் வேலை செய்யும் விவசாயத் தொழிலாளர்களையும், ஏழை உழைப்பாளி மக்களையும், இழிவாகவும், கொச்சைப்படுத்தியும் பேசியதாக நாம் தமிழர் கட்சியின் தலைவர் சீமான் மற்றும் மக்கள் நீதி மையம் கட்சி கமலஹாசன் ஆகியோரை கண்டித்து இன்று குமரி மாவட்டம் ராஜாக்கமங்கலம் ஒன்றியம் நைனாபுதூர் பகுதியில் விவசாய தொழிலாளர் சங்கம் சார்பில் ஒன்றிய தலைவர் மிக்கேல் நாயகி தலைமையில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்கள் கமல்ஹாசன் மற்றும் சீமானுக்கு எதிராக கோஷங்களை எழுப்பினர்.

அண்மையில் 100 நாள் திட்டத்தை ஒழித்தால் மட்டுமே விவசாயம் செழிக்கும் என்று சீமான் மற்றும் கமல்ஹாசன் கருத்து தெரிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.

Views: - 532

0

0