கள்ளக்காதலனுடன் உல்லாசம் : நேரில் பார்த்த கணவரை கம்பியால் அடித்துக் கொல்ல முயன்ற மனைவி

Author: Babu Lakshmanan
10 January 2022, 6:37 pm

photo of a fresh crime scene

Quick Share

கன்னியாகுமரி : கள்ளக்காதலனுடன் உல்லாசமாக இருப்பதைக் கண்ட கணவனை மனைவி அடித்துக் கொல்ல முயன்ற சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

நித்திரவிளை அருகே உள்ள கோபுரக்காடு பகுதியைச் சேர்ந்தவர் ராஜ்குமார் (40). லாரி டிரைவர். ராஜ்குமாரின் மனைவி கவிதா. இவர்களுக்கு 2 குழந்தைகள் உள்ளனர். எஸ்.டி. மங்காடு பகுதியில் ஒரு வீட்டின் மேல் மாடியில் கடந்த 3 மாதமாக வாடகைக்கு குடியிருந்து வருகிறார்கள். சம்பவதன்று ராஜ்குமார் மனைவியிடம் வேலைக்கு செல்வதாக கூறிவிட்டு வெளியே சென்றார். சிறிது நேரத்தில் அவர் மீண்டும் வீட்டுக்கு வந்தார்.

அப்போது, வீட்டில் ராஜ்குமாரின் மனைவியும், அவரது கள்ளக்காதலனும் உல்லாசமாக இருந்தனர். இதனைப்பார்த்து அதிர்ச்சி அடைந்த ராஜ்குமார் சத்தம் போட்டார். இதில் ஆத்திரமடைந்த ராஜ்குமாரின் மனைவி மற்றும் அவரது கள்ளக்காதலன் இருவரும் சேர்ந்து கத்தியால் ராஜ்குமாரை சரமாரியாக வெட்டினர். இதில் ராஜகுமார் பலத்த காயமடைந்தார். அவரை அக்கம் பக்கத்தினர் மீட்டு ஆசாரிப்பள்ளம் அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு அவருக்கு டாக்டர்கள் தீவிர சிகிச்சை அளித்து வருகின்றனர்.

இச்சம்பவம் குறித்து நித்திரவிளை போலீசில் புகார் செய்யப்பட்டது. போலீசார் விசாரணை நடத்தி ராஜ்குமாரின் மனைவி கவிதா மற்றும் அவரது கள்ளக்காதலன் ஆகியோர் மீது வழக்குப்பதிவு செய்தனர். ராஜ்குமாரை தாக்கிய அவரது மனைவியும் கள்ளக்காதலனும் தலைமறைவாகி விட்டனர். அவர்களை போலீசார் தேடி வருகிறார்கள். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Views: - 385

0

0