கொரோனா பொது நிவாரண நிதிக்கு காங்கிரஸ் எம்.பி. விஜய் வசந்த் ரூ.25 லட்சம் நிதியுதவி!

17 May 2021, 10:58 pm
Quick Share

சென்னை: முதலமைச்சர் கொரோனா பொது நிவாரண நிதிக்கு விஜய் வசந்த் எம்.பி., ரூ.25 லட்சம் நிதியுதவி வழங்கியுள்ளார்.

தமிழகத்தில் கொரோனா தொற்றைக் கட்டுப்படுத்த மே 24ம் தேதி வரை முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது.கொரோனா பெருந்தோற்றை எதிர்த்து போராடி வரும் தமிழக அரசுக்கு உதவும் விதமாக முதலமைச்சர் பொது நிவாரண நிதி தாராளமாக நிதி கொடுங்கள் என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கோரிக்கை விடுத்ததை அடுத்து அரசியல் கட்சி தலைவர்கள், தன்னார்வலர்கள், தொண்டு நிறுவனங்கள், தொழிலதிபர்கள், திரையுலகினர் உள்ளிட்ட பலரும் நிதியை வாரி வழங்கி வருகின்றனர்.அந்த வகையில், இன்று சென்னை தலைமைச் செயலகத்துக்குச் சென்ற நடிகரும் குமரி எம்பியுமான விஜய் வசந்த், தமிழக முதலமைச்சர் மு.க. ஸ்டாலினை நேரில் சந்தித்து கொரோனா பொது நிவாரண நிதியாக ரூபாய் 25 லட்சம் நிதியை வழங்கினார்.

Views: - 69

0

0