முக்கடல் அணை பூங்கா பகுதியில் சிறுத்தை நடமாட்டம் : பொதுமக்கள் எச்சரிக்கையாக இருக்க அறிவுறுத்தல்

Author: Babu Lakshmanan
5 August 2021, 11:40 am
cheetah - updatenews360
Quick Share

கன்னியாகுமரி : முக்கடல் அணை பூங்கா பகுதியில் நள்ளிரவில் சிறுத்தை நடமாட்டம் இருப்பது உறுதியானதை தொடர்ந்து, பொதுமக்கள் எச்சரிக்கையாக இருக்குமாறு வனத்துறை அதிகாரிகள் அறிவுறுத்தியுள்ளனர்.

குமரி மாவட்டம் நாகர்கோவில் மாநகருக்கு முக்கடல் அணையில் இருந்து தண்ணீர் வினியோகம் செய்யப்படுகிறது. முக்கடல் அணை பராமரிப்பு பணியை நாகர்கோவில் மாநகராட்சி மேற்கொண்டு வருகிறது. அணையின் கீழ் தளத்தில் சிறுவர் பூங்கா மற்றும் பள்ளி, கல்லூரி மாணவர்களின் கல்விச் சுற்றுலா வசதிக்காக பூங்கா ஏற்படுத்தப்பட்டுள்ளன.

இந்நிலையில் கடந்த இரு தினங்களுக்கு முன்பு இரவு நேரத்தில் சிறுத்தைப்புலி ஒன்று பூங்காவுக்குள் வந்து சென்றுள்ளது. இந்த காட்சிகள் அங்கு பொருத்தப்பட்டிருந்த கண்காணிப்பு கேமராவில் பதிவாகி உள்ளன.

சமீபகாலமாக குமரி மாவட்டத்தில் உள்ள காடுகளில் வனவிலங்குகள் நடமாட்டம் அதிகரித்துள்ள நிலையில், முக்கடல் அணை பகுதியில் சிறுத்தைப்புலி நடமாட்டம் கண்டறியப்பட்டுள்ளது. இதன்மூலம், வனப்பகுதிகளில் அதிகளவில் வனவிலங்குகள் இருப்பதை உறுதி செய்துள்ளதாக எச்சரிக்கும் அதிகாரிகள், பொதுமக்கள் எச்சரிக்கையாக இருக்க வேண்டும் என்று அறிவுறுத்தினர்.

Views: - 509

0

0