தமிழக அரசை கண்டித்து தட்டு ஏந்தி பிச்சை கேட்டு போராட்டம்… ரப்பர் தோட்ட தொழிலாளர்கள் நூதன முறையில் கவன ஈர்ப்பு…!!

Author: Babu Lakshmanan
8 August 2022, 9:57 pm
Quick Share

கன்னியாகுமரி : ஊதிய உயர்வு வழங்காமல் காலம் தாழ்த்தி வரும் தமிழக அரசை கண்டித்து கன்னியாகுமரி மாவட்டம் கிரிப்பாறை அரசு ரப்பர் தோட்ட தொழிலாளர்கள் தொழிற்கூடம் முன்பு கையில் தட்டு ஏந்தி பிச்சை கேட்டு போராட்டம் நடத்தினர்.

கன்னியாகுமரி மாவட்டம் கீரிப்பாறையில் தமிழக அரசுக்கு சொந்தமான ரப்பர் தொழிற் கூடம் உள்ளது. இதில், அரசு தொழிற்கூடம் மற்றும் கீரிப்பாறை கோட்டம் காளிகேசம், பரளியாறு, மணலோடை ஆகிய நான்கு பிரிவுகளிலும் இரண்டாயிரத்துக்கும் மேற்பட்ட பால் வடிப்பு மற்றும் தொழிற்கூடத் தொழிலாளர்கள் பணிபுரிந்து வருகிறார்கள்.

இவர்களுக்கு, ஊதிய உயர்வு வழங்காமல் காலம் தாழ்த்தி வரும் தமிழக அரசை கண்டித்து மாவட்ட ஐ.என்.டி.சியூ தொழிற்சங்கம் சார்பில் கீரிப்பாறை அரசு ரப்பர் தொழிற்கூடம் முன்பு கையில் தட்டு ஏந்தி பிச்சை கேட்டு போராட்டம் நடத்தினார்கள். போராட்டத்திற்கு ஐஎன்டிசியூ மாவட்ட தலைவர் ஜோசப் ஜெரால்டு தலைமை தாங்கினார்.

மாவட்ட பொதுச்செயலாளர் பால்ராஜ், துணைத்தலைவர் செல்வின் ராஜ், ஆகியோர் முன்னிலை வைத்தனர். ஆர்ப்பாட்டத்தில் கோட்ட கண்வினர் அலெக்சாண்டர் தொழிற்கூடம் கண்வினர் நாகராஜன் மற்றும் செய்யது அலி, செல்லத்துரை, தங்க ராஜா மற்றும் திரளான ஆண்கள் மற்றும் பெண்கள் தொழிலாளர்கள் கலந்து கொண்டனர்.

இவர்கள் கையில் தட்டு ஏந்தி அரசு ரப்பர் தொழிற்கூட அலுவலர்களிடம் பிச்சை கேட்டனர். பின்னர் கீரிப்பாறை கோட்ட மேலாளர் அலுவலகத்திலும் உள்ள அலுவலர்களிடம் பிச்சை கேட்டதோடு, தொடர்ந்து அங்கிருந்து நாகர்கோவில் வடசேரியில் உள்ள அரசு ரப்பர் கழக நிர்வாக இயக்குனர் மற்றும் வனத்துறை அலுவலரிடம் பிச்சை கேட்டு தங்களது போராட்டத்தை நிறைவு செய்தனர்.

Views: - 806

0

0