கனமழை ஒருபக்கம்… கடல் சீற்றம் மறுபக்கம் : வெள்ளத்தால் தத்தளிக்கும் குமரி மக்கள்…!!!

Author: Babu Lakshmanan
13 November 2021, 6:24 pm
kumari sea - updatenews360
Quick Share

கன்னியாகுமரி : சுற்றுலா தலமான கன்னியாகுமரியில் இன்று காலை முதலே கடல் சீற்றத்துடன் காணப்படுவதால் மீனவர்கள் அச்சத்தில் இருந்து வருகின்றனர்.

குமரி மாவட்டத்தில் கடந்த 3 நாட்களாக தொடர் மழை பெய்து வரும் நிலையில், சர்வதேச சுற்றுலா தலமான கன்னியாகுமரியில் இன்று காலை முதல் கடல் சீற்றத்துடன் காணப்பட்டது. இதனால், கடல் அலைகள் பாறைகளில் மோதி சுமார் 20 அடிக்கு மேல் எழும்பின.

சுற்றுலாப்பயணிகள் கடலில் குளிக்க அனுமதி மறுக்கப்படுவது. கடல் நடுவே உள்ள விவேகானந்தர் பாறை திருவள்ளுவர் சிலைக்கு படகு சேவை நிறுத்தப்பட்டது. மேலும், மழை காரணமாக சுற்றுலா பயணிகள் வருகை முற்றிலும் குறைந்தது.

தொடர்ந்து கடல் சீற்றத்துடன் காணப்படுவதால் கன்னியாகுமரி மற்றும் அதன் சுற்று வட்டார பகுதி மீனவர்கள் கடும் பதட்டத்துடன் இருந்து வருகின்றனர்.

Views: - 386

0

0