30 சுற்றுகளாக சட்டப்பேரவை தேர்தல் முடிவுகளை வெளியிட திட்டம் : வாக்கு எண்ணிக்கைக்கான ஏற்பாடுகள் தீவிரம்..!!!

10 April 2021, 7:06 pm
tamilnadu vote counting - updatenews360
Quick Share

கன்னியாகுமரி : கன்னியாகுமரி சட்டசபை தொகுதியில் பதிவான வாக்குகள் 30 சுற்றுகளாக எண்ண முடிவு செய்து, அதற்கான ஏற்பாடுகள் தீவிரப்படுத்தப்பட்டு வருகிறது.

கன்னியாகுமரி, நாகர்கோவில், குளச்சல், பத்மநாபபுரம், விளவங்கோடு, கிள்ளியூர் ஆகிய 6 சட்டசபை தொகுதி தேர்தல் மற்றும் பாராளுமன்ற இடைத்தேர்தல் கடந்த 6ஆம் தேதி நடைபெற்றது. தேர்தலில் பயன்படுத்தப்பட்ட வாக்குப்பதிவு எந்திரங்கள் பலத்த போலீஸ் பாதுகாப்புடன் கொண்டு வரப்பட்டு நாகர்கோவில் கோணம் அரசு பாலிடெக்னிக் மற்றும் இன்ஜினியரிங் கல்லூரியில் பாதுகாப்பாக வைக்கப்பட்டுள்ளது.

வாக்கு எந்திரங்கள் வைக்கப்பட்டுள்ள இடத்தில் 3 அடுக்கு போலீஸ் பாதுகாப்பு மற்றும் 250 க்கும் மேற்பட்ட போலீசார் , துணை ராணுவத்தினரும் கண்காணிப்பு பணியை மேற்கொண்டு வருகின்றனர். தேர்தலுக்கான வாக்கு எண்ணிக்கை மே 2-ந் தேதி நடைபெறும் நிலையில், காலை 8 மணிக்கு வாக்கு எண்ணிக்கை நடைபெறும். அதற்கான முன்னேற்பாடு பணிகளை தேர்தல் அதிகாரிகள் செய்து வருகின்றனர்.

குமரி மாவட்டத்தில் வாக்கு எண்ணிக்கை மையங்களில் 14 மேஜைகள் அமைத்து வாக்கு எண்ணிக்கை நடத்த ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகிறது. கன்னியாகுமரி சட்டமன்ற தொகுதியில் அதிகபட்சமாக 30 சுற்றுகளில் வாக்குகள் எண்ணப்பட உள்ளது. கன்னியாகுமரி தொகுதியை பொறுத்தவரை 417 வாக்குச் சாவடியில் உள்ள மின்னணு எந்திரங்கள் பலத்த பாதுகாப்புடன் வைக்கப்பட்டுள்ளது. ஒரு சுற்றுக்கு 14 மின்னணு வாக்கு இயந்திரங்கள் எடுக்கப்பட்டு, அதில் பதிவாகி இருந்த வாக்குகள் எண்ணப்படும். 417 மின்னணு வாக்கு இயந்திரங்களில் பதிவான வாக்குகளை 30 சுற்றுகளில் என்ன ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது. இறுதி முடிவுகள் வெளியாவதற்கு மாலை 4 மணிக்கு மேல் ஆகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

நாகர்கோவில் சட்டமன்ற தொகுதியை பொறுத்தவரை 390 வாக்குப்பதிவு இயந்திரங்கள் உள்ளது. ஒரு சுற்றுக்கு 14 மின்னணு இயந்திரங்களில் பதிவான வாக்குகள் எண்ணப்படும். இந்த தொகுதியில் 28 சுற்றுகளில் வாக்குகள் எண்ணி முடிக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது .

குளச்சல் சட்டமன்ற தொகுதியில் பயன்படுத்தப்பட்ட 272 வாக்குப்பதிவு இயந்திரங்களில் பதிவான வாக்குகளை 7 சுற்றிலும், பத்மநாபபுரம் தொகுதியில் பயன்படுத்த 348 மின்னணு இயந்திரங்களில் பதிவான வாக்குகளை 25 சுற்றுகளில் எண்ணப்படுகின்றன.

அதேபோல் கிள்ளியூர் தொகுதியில் பயன்படுத்தப்பட்ட 358 மின்னணு இயந்திரங்களில் பதிவான வாக்குகளை 26 சுற்றுகளாகவும் எண்ண ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. விளவங்கோடு தொகுதியில் பயன்படுத்தப்பட்ட 358 மின்னணு இயந்திரங்களில் பதிவான வாக்குகளை 26 சுற்றுகளாகவும் எண்ண ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன .

கன்னியாகுமரி பாராளுமன்ற தொகுதி வாக்குகளும் சட்டமன்ற தொகுதி வாரியாக தனித்தனியாக எண்ணப்படுகின்றன. மே 2-ந்தேதி வாக்கு எண்ணிக்கை காலை 8 மணிக்கு தொடங்கி முதல் சுற்று முடிவு வெளிவருவதற்கு காலை 9 மணிக்கு மேல் ஆகலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

வாக்கு எண்ணிக்கை முழுவதும் சுற்று வாரியாக பொதுமக்கள், தொண்டர்கள் தெரிந்துகொள்ள வசதியாக ஒலிபெருக்கியில் தெரிவிக்கும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. தபால் வாக்குகள் தற்போதும் பெறப்பட்டு வருகிறது. தபால் வாக்குகள் எண்ணிக்கை முந்தைய நாள்வரை பெறுவதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது. வாக்குப் பதிவு தபால் வாக்குகள் எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்படும்.

Views: - 57

1

0