கணவன் மீது வெந்நீரை ஊற்றி கத்தியால் குத்திய மனைவி : பொண்டாட்டியின் சகோதரருக்கு பணம் கொடுத்ததை திருப்பி கேட்டதால் ஆத்திரம்!!!

Author: Babu Lakshmanan
23 August 2021, 5:50 pm
Quick Share

கன்னியாகுமரி : திக்குறிச்சி அருகே கணவன் மீது வெந்நீரை ஊற்றி கத்தியால் குத்திய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

குமரி மாவட்டம் மார்த்தாண்டத்தை அடுத்துள்ள திக்குறிச்சி பகுதியை சேர்ந்தவர் அமல்ராஜ். ஓய்வு பெற்ற ராணுவ வீரர். இவரது மனைவி ராஜேஸ்வரி. அமல்ராஜ் ராணுவத்தில் பணியாற்றிய ஓய்வு பெற்ற போது வந்த பென்சன் பணத்தில் ரூ.5 லட்சத்தை ராஜேஸ்வரியின் தம்பி அஜி கடனாக பெற்றுள்ளார்.

இந்நிலையில் நேற்று அமல்ராஜ் தனது மனைவி ராஜேஸ்வரியிடம் தனது தம்பியிடம் இருந்து படத்தை பெற்று தருமாறு கேட்டதாக கூறப்படுகிறது. இதனால் கணவன், மனைவி இடையே தகராறு ஏற்பட்டுள்ளது. இதில் ஆத்திரமடைந்த மனைவி ராஜேஸ்வரி கணவன் என்று கூட பார்க்காமல், அவரது உடலில் வெந்நீரை ஊற்றி வீட்டிலுள்ள கத்தியை எடுத்து அவரது வயிற்றில் குத்தியுள்ளார். இச்சம்பவம் குறித்து மார்த்தாண்டம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Views: - 460

0

0