அ.ம.மு.க பிரமுகருக்கு அரிவாள் வெட்டு… குடும்ப தகராறில் உறவினர்களே கூலி படையை ஏவி கொலை செய்ய முயற்சி

28 October 2020, 11:38 pm
Quick Share

கன்னியாகுமரி: குடும்ப தகராறில் உறவினர்களே கூலி படையை ஏவி அ.ம.மு.க பிரமுகரை கொலை செய்ய முயன்ற சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

குமரிமாவட்டம் புத்தேரி பகுதியை சேர்ந்தவர் அசோக் (27).இவர் நாகர்கோயில் நகர அ.ம.மு.க வட்டச் செயலாளராக இருந்து வருகிறார்.கடந்த எட்டு ஆண்டுகளுக்கு முன் இசைவாணி என்ற பெண்ணை காதலித்து திருமணம் செய்து கொண்டுள்ளார். இவர்களுக்கு ஒரு மகன் உள்ளார்.

இந்நிலையில் இன்று இரவு அசோக் வடசேரி பேருந்து நிலையத்தில் நின்று கொண்டிருந்த போது ஆறு பேர் கொண்ட மர்ம கும்பல் திடீரென வந்து அரிவாளால் வெட்டி கொலைவெறித் தாக்குதல் நடத்தியுள்ளனர்.இரத்த வெள்ளத்தில் மிதந்த அவரை அக்கம்பக்கத்தினர் மீட்டு அருகில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதித்தனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

இது குறித்து வடசேரி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தினர்.விசாரணையில் குடும்ப பிரச்சினை காரணமாக உறவினர்களே கூலிப்படையை ஏவி அசோக்கை கொலை செய்ய முயற்சி செய்தது தெரியவந்துள்ளது.இச்சம்பவத்தில் நாங்குநேரி சேர்ந்த சுரேஷ் உட்பட 5 பேர் மீது வழக்கு பதிவு செய்து கூலி படையினரை போலீசார் தேடி வருகின்றனர். தாக்கப்பட்ட அசோக்கை குமரி கிழக்கு மாவட்ட அ.ம.மு.க செயலாளர் செந்தில் முருகன் ,இணை செயலாளர் அம்மா ஆன்றோ ஆகியோர் நேரில் சந்தித்து ஆறுதல் கூறினர்.

Views: - 17

0

0