படகு கவிழ்ந்து விபத்து.! அதிர்ஷ்டவசமாக தப்பிய மீனவர்கள்.!!

8 August 2020, 6:46 pm
Kanyakumari Boat Upset - Updatenews360
Quick Share

கன்னியாகுமரி : தேங்காய் பட்டணம் அருகே 13 நாட்களில் 3- மீனவர்கள் பலியான நிலையில் இன்று 2 படகுகள் கவிழ்ந்து 10 மீனவர்கள் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினர்.

கன்னியாகுமரி மாவட்டம் தேங்காய்பட்டணம் துறை முக கட்டுமானத்தின் போது மீனவர்கள் துறைமுக துவாரத்தை அகலமாக அமைக்க கோரிக்கை விடுத்தனர். ஆனால் அதிகாரிகள் குருவலாக அமைத்தனர். இதனால் இந்த பகுதிகளில் மணல் திட்டுகள் உருவாகி விபத்துகள் ஏற்பட்டு உயிர்பலிகள் தொடர்ந்து வருகிறது.

இந்த வருடம் மட்டும் 11- உயிர்கள் பலியாகின. கடந்த 13-நாட்களில் 3-மீனவர்கள் துறைமுகத்தில் படகு கவிழ்ந்து பலியாகினர். இந்த துறைமுக முகத்துவாரத்தை ஆழ படுத்தி அகல படுத்த வேண்டும் எனவும், இறந்த மீனவர்களின் மீனவர்களுக்கு நிவாரணம் வழங்க கேட்டும் 300-க்கும் மேற்பட்ட மீனவர்கள் தொடர் உண்ணாவிரத போராட்டத்தை இன்று தொடங்கி நடத்தி வரும் நிலையில் தேங்காய் பட்டணம் துறைமுகத்தில் கடலில் மீன் பிடித்து விட்டு திரும்பிய இரண்டு படகுகள் பொழிமுக துறைமுக தடுப்பு சுவர் மற்றும் மணல் மேடுகளில் சிக்கி விபத்துக்குள்ளாகியது.

இந்த இரண்டு படகுகளிலும் இருந்த 10-மீனவர்களும் கடல் அலையில் சிக்கி தவித்த போது கரையில் இருந்த மீனவர்கள் பெரிய விசை படகில் சென்று அவர்களை மீட்டனர். கரையில் இருந்த மீனவர்கள் துரிதமாக செயல்பட்டு மீட்டதால் 10 மீனவர்களும் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினர்

Views: - 14

0

0