கஞ்சா கடத்தலில் சிக்கும் கன்னியாகுமரி இளைஞர்கள் : மீண்டும் 3 பேர் கைது!!

Author: Udayachandran
12 October 2020, 1:14 pm
Kanja 3 Arrest - Updatenews360
Quick Share

கன்னியாகுமரி : வெள்ளறடை எல்லையில் கேரளா போதை பொருள் கடத்தல் தடுப்பு பிரிவு போலீசார் நடத்திய சோதனையில் 55 கிலோ கஞ்சா சிக்கியது. இது தொடர்பாக மூன்று பேரை போலீசார் கைது செய்துள்ளனர்.

கன்னியாகுமரி மாவட்டம் வழியாக கடந்த சில வாரங்களாக கேரளாவுக்கு போதை பொருட்கள், ரேஷன் அரிசி கடத்தி செல்வது நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இந்நிலையில் இரு மாநில போலீசார் தமிழக கேரளா எல்லை பகுதிகளில் சோதனை தீவிரப்படுத்தி உள்ளனர்.

இதனால் இரு மாநில எல்லைகளில் இருந்து கடந்த சில தினங்களில் அந்தந்த மாநில போலீசார் நடத்திய சோதனைகளில் சுமார் 500 கிலோ கஞ்சா பறிமுதல் செய்ததோடு 20 க்கும் மேற்பட்டோர் கைதாகி உள்ளனர்.

இந்நிலையில் தமிழக கேரளா எல்லை பகுதியான வெள்ளறடை பகுதியில் கேரளா போதை பொருள் கடத்தல் தடுப்பு பிரிவு போலீசார் நடத்திய திடீர் சோதனையில் பூவங்குழி பகுதியில் ஒரு வீட்டிற்குள் பதுக்கி வைக்கப்பட்டிருந்த 55 கிலோ கஞ்சா பறிமுதல் செய்தனர்.

தொடர்ந்து கடத்தல் கும்பலை சார்ந்த நாகராஜ் (வயது 33), நிகில் (வயது 21) , ஆரிஃப் (வயது 20) ஆகிய மூன்று பேரை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Views: - 48

0

0