பைபர் படகு கவிழ்ந்து விபத்து:உயிர் தப்பிய மீனவர்கள்!!
9 September 2020, 4:15 pmகன்னியாகுமரி : கேரளாவில் சூறை காற்றுடன் பெய்த மழையால் கொல்லம் ஆழ்கடலில் பைபர் படகு கவிழ்ந்து ஏற்பட்ட விபத்தில் 5 மீனவர்கள் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினர்.
தென்கிழக்கு அரபிக்கடலில் குறைந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் உருவாகி உள்ளதால் வினாடிக்கு 55 முதல் 65 காற்று வீசும் என வானிலை மையம் எச்சரிக்கை விடுத்து இருந்தது.
இந்த நிலையில் ஆழ்கடலில் மீன் பிடிக்க சென்ற மீனவர்கள் கரைக்கு திரும்பிய நிலையில் கொல்லம் கடற்பகுதியில் இருந்து ஆழ் கடலுக்கு மீன்பிடிக்க சென்ற குமரி மாவட்டத்தை சேர்ந்த 5 மீனவர்கள் சூறை காற்றில் படகு கவிழ்ந்து தத்தளித்தனர்.
இந்த நிலையில் அந்த வழியாக வந்த கேரளா படகில் வந்த மீனவர்கள் குமரி மீனவர்களை மீட்டு கோழிக்கோடு அரசு மருத்துவமனையில் அனுமதிக்க பட்டனர். தொடர்ந்து இவர்கள் எந்த இடத்தை சேர்ந்த மீனவர்கள் என கடலோர காவல் துறை விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்
0
0