குமரியில் ஆதரவற்றவர்களை தேடி உணவு அளித்த போலீசார் : தர்மத்தை தழைக்க வைத்த காவலர்!!

25 April 2021, 5:41 pm
Police Food -Updatenews360
Quick Share

கன்னியாகுமரி : ஆதரவற்றவர்களை தேடிச் சென்று மதிய உணவு வழங்கிய போலீசாரின் சேவையை அறிந்த பலர் பாராட்டி வருகின்றனர்.

தமிழகம் முழுவதும் இன்று 24 மணி நேர ஊரடங்கு அமுலில் உள்ளது. இதற்காக இன்று அதிகாலை முதலே கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவிலில் வடசேரி, கோட்டார் காவல் நிலைய சரகத்திற்கு உடபடட் வடசேரி, மணிமேடை, கோட்டார், உள்ளிட்ட முக்கிட சந்திப்புகள் போலீசார் சாலைகளில் தடுப்புகள் அமைத்து பாதுகாப்பு பணிகளில் ஈடுபட்டு வந்தனர்.

கொரோனா ஊரடங்கில் பொது மக்கள் யாரும் வீட்டை விட்டு வெளியே வரக்கூடாது என்ற நிலையில் அதையும் மீறி சாலையில் செல்வோர்களை விசாரணைக்கு பின்னரே அனுமதிக்கும் பணிகளில் போலீசார் ஈடுபட்டுள்ளனர்.

நாகர்கோவிலில் உள்ள கோட்டார், வடசேரி காவல் நிலைய ஆய்வாளர் திருமுருகன் தலைமையில் போலீசார் இன்று அண்ணா பேருந்து நிலையம். வடசேரி கிறிஸ்டோபர் பேருந்து நிலையங்களில் உள்ள ஆதரவற்றவர்களை தேடி சென்று மதிய உணவு வழங்கினார்கள். போலிசாரின் இந்த கருணை சேவையை அறிந்த பலரும் பாராட்டினார்கள்.

Views: - 439

0

0