பத்திரிகையாளர் என்ற பெயரில் வசூல் வேட்டை..!! மினி லாரியில் கடத்த முயன்ற 27 -மூட்டை போதை வஸ்துக்கள் பறிமுதல்..!!

29 September 2020, 4:17 pm
Quick Share

கன்னியாகுமரி :பத்திரிகையாளர் சமூக சேவகர் என்ற பெயரில் கன்னியாகுமரி மாவட்டம் குலசேகரம் அருகே நூதன முறையில் மினி லாரியில் கடத்த முயன்ற 27 மூட்டை குட்கா, பான் மசாலா பறிமுதல் செய்யப்பட்டு போலி பத்திரிகையாளர் உட்பட இருவர் கைது செய்யப்பட்டனர்.

குலசேகரம் அருகே காவஸ் தலம் பகுதியில் குலசேகரம் போலீஸ் அதிகாலையில் வாகன சோதனையில் ஈடுபட்ட போது அவ்வழியாக வந்த இரு நபர்களை சந்தேகத்தின் பேரில் விசாரணை நடத்தினர்.

அப்போது அவர்கள் அருகில் உள்ள மசூதியில் தொழுகைக்கு வந்ததாக கூறியுள்ளார். ஆனால் அவர்களின் நடத்தையில் சந்தேகம் கொண்ட போலீசார் இருவரையும் துருவி துருவி நடத்திய விசாரணையில் இவர்கள் குலசேகரம் அருகே கவலஸ்தலம் பகுதியை சேர்ந்த ரபீக் (40)ஜலீல் (42)என்பதும் இருவரும் அதே பகுதியில் உள்ள ஒரு குடோனில் மினி லாரியில் நூதன முறையில் சாக்கு மூடைகளில் வாழைத்தார், மற்றும் வெங்காயம் போன்றவையின் அடி பகுதியில் குட்கா பொருட்கள் பதுக்கி கடத்தி சென்று குடோனில் இறக்கி விட்டு வந்ததும் தெரிய வந்தது.

மேலும் சுமார் இரண்டரை லட்சம் மதிப்பிலான குட்கா பொருட்களை போலீசார் பறிமுதல் செய்தனர். அதோடு இவர்கள் கடத்தலுக்கு பயன்படுத்திய மினி லாரி மற்றும் இரு சக்கர வாகனத்தையும் பறிமுதல் செய்தனர்.

இரு சக்கர வாகனத்தில் press என்ற sticker ஒட்டப்பட்டத்தை பார்த்த போலீசார் இது பற்றி அவர்களிடம் நடத்திய விசாரணையில் ரபீக் என்பவர் பத்திரிகையாளர் போர்வையில் போலி ஸ்டிக்கர் ஒட்டி வலம் வந்ததும் , சமூக சேவகர் என்ற பெயரை சொல்லி அப்பகுதியில் பொதுமக்கள் இடம் பல லட்சம் ரூபாய் வசூல் வேட்டையில் ஈடுபட்டதும் அம்பலமானது. தொடர்ந்து பல்வேறு பிரிவுகளில் வழக்கு பதிவு செய்து இருவரையும் சிறையில் அடைத்தனர்.

Views: - 8

0

0