டிரோன் மூலம் மக்களை கண்காணிக்கும் காவல்துறை.!வெளியே வந்தால் சிறை தண்டனை..!! (வீடியோ)

26 March 2020, 7:03 pm
Kanykumari Spy Drone- Updatenews360
Quick Share

கன்னியாகுமரி : ஊரடங்கு அமுலில் இருக்கும் போது சாலைகளை கண்காணிக்க டிரோன் கேமரா முறை கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவிலில் இன்று அமல் படுதப்ட்டது.

கொரோனா வைரஸ் பரவாமல் இருக்க நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவு அமல் படுத்தபட்டு உள்ளது. கன்னியாகுமரி மாவட்டத்தில் சாலைகளில் போலீசார் தீவீர சோதனைகளில் ஈடுபட்டு வருகின்றனர். மேலும் சாலைகளில் அனாவசியமாக வருவோர்களை கண்காணிக்க முதன்முறையாக கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவிலில் டிரோன் கேமரா முறை இன்று முதல் அமுல் படுத்தபட்டது.

நாகர்கோவில் வடசேரி பேருந்து நிலையத்தில் மாவட்ட எஸ்பி. ஸ்ரீநாத் இதனை தொடங்கி வைத்தார். நாகர்கோவில் நகர் முழுவதும் நடைபெறும் சம்பவங்கள், விதிகளை மீறி சாலைகளில் வருவோர்களை மாவட்ட எஸ்.பி. அலுவலகத்தில் கட்டுபாட்டு அறைகளில் இருந்து கண்காணிக்கப்படும் வகையில் இந்த டிரோன் கேமரா முறை செயல்பாட்டில் அமைக்கபட்டு உள்ளது.

இது குறித்து எஸ்.பி. ஸ்ரீநாத் செய்தியாளர்களிடம் கூறுகையில், வெளிநாட்டில் இருந்து குமரி மாவட்டம் வந்த 3600 பேர் தனிமைப்படுத்தப்பட்டு உள்ளனர் என்று கூறினார். இவர்கள் வெளியே நடமாடினால் நிரந்தரமாக சிறை தண்டனை கொடுக்கப்படும் என எச்சரித்தார்.

விதிமுறைகளை மீறி சாலைகளில் அனாவசியமாக வந்தவர்கள் நேற்று ஒரே நாளில் 11 பேர்கள் மீது வழக்கு பதிவு செய்யபட்டு உள்ளதாகவும், கேரளாவில் இருந்து கடல்மார்க்கமாக மீனவர்கள் சொந்த ஊர்களுக்கு வருவதாக கிடைத்த தகவிலின் படி, அவர்களை மருத்துவ குழுவினர் சோதனைகளுக்கு பின்னரே ஊரில் செல்ல அனுமதிக்கபடுவார்கள் என கூறினார்.