மழை மேகம் சூழ்ந்த கன்னியாகுமரி: சிக்கித்தவித்த ஆதவன்….சுற்றுலா பயணிகள் ஏமாற்றம்…!!

Author: Aarthi Sivakumar
24 October 2021, 9:10 am
Quick Share

கன்னியாகுமரி: குமரியில் இன்று வானம் மழை மேகம் சூழ்ந்த காணப்பட்டதால் சூரிய உதயம் காட்சி தெரியவில்லை. இதனால் அங்கு வந்த சுற்றுலா பயணிகள் ஏமாற்றத்துடன் சென்றனர்.

விடுமுறை நாளான இன்று கன்னியாகுமரி சூரிய உதயம் காண அதிகாலையில் நூற்றுக்கணக்கான சுற்றுலா பயணிகள் குவிந்தனர் .

ஆனால் இன்று அதிகாலை முதலே கன்னியாகுமரி மாவட்டத்தில் கடுமையான மேகமூட்டத்துடன் சாரல் மழை பெய்து வந்தது.

இதனால் சர்வதேச சுற்றுலா தலமான கன்னியாகுமரியில் சூரிய உதய காட்சி தெரியவில்லை . இந்நிலையில் சூரிய உதயத்தை காண கன்னியாகுமரிக்கு வந்த சுற்றுலா பயணிகள் ஏமாற்றத்துடன் வீடு திரும்பினர்.

Views: - 435

0

0