புகார் அளிக்க சென்ற இளம்பெண் பாலியல்.! உதவி ஆய்வாளர் மீது நடவடிக்கை எடுக்காததால் விபரீதம்.!!
2 August 2020, 12:23 pmகன்னியாகுமரி : மார்த்தாண்டம் அருகே பாலியல் தொடர்புக்கு ஆளாக்கி கர்ப்பம் அடைய செய்து கட்டாய கருக்கலைப்பு செய்ய காரணமாக உள்ள உதவி ஆய்வாளர் குறித்து நடவடிக்கை எடுக்காததால் விரக்தி அடைந்த பெண் தற்கொலை முயன்ற சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
கன்னியாகுமரி மாவட்டம் மார்த்தாண்டம் அருகே மேற்கு பகுதியை சேர்ந்த ஜோஸ்பின் என்ற 31 வயது இளம்பெண் தனது குடும்ப பிரச்சனை தொடர்பாக பளுகல் காவல் நிலையத்தில் உதவி ஆய்வாளர் சுந்தரலிங்கத்திடம் புகார் அளித்திருந்தார்.
புகாரை விசாரிப்பதாக கூறி தனியாக அழைத்த உதவி ஆய்வாளர் தன்னுடன் பாலியல் தொடர்பு ஏற்படுத்தியதாகவும் அதன் மூலம் அப்பெண் கர்ப்பம் அடைந்ததாக தெரிகிறது. அதன் பின் அப்பெண்ணை கட்டாய கருக்கலைப்பு செய்ததாகவும் கூறப்படுகிறது.
இதுதொடர்பாக ஜோஸ்பின் காவல்துறை உயர் அதிகாரிகளுக்கும் புகார் அளித்த நிலையில் சுந்தரலிங்கம் மீது காவல்துறை இதுவரை எவ்வித நடவடிக்கை எடுக்கப்படவில்லை என கூறப்படுகிறது. இது தொடர்பாக மாதர் சங்கத்தினர் பல்வேறு போராட்டங்கள் நடத்திய நிலையில் சம்பந்தப்பட்ட நபர் மீது காவல்துறை நடவடிக்கை எடுக்காததால் அதிருப்தி அடைந்த ஜோஸ்பின் நேற்றிரவு திடீரென அளவுக்கு அதிகமான மாத்திரைகளை சாப்பிட்டு தற்கொலை முயற்சியில் ஈடுபட்டார்.
வீட்டில் மயக்கமடைந்து உயிருக்கு ஆபத்தான நிலையில் காணப்பட்ட அவரை மாதர் சங்கத்தினர் தக்கலை அரசு மருத்துவமனைக்கு அழைத்துச் சென்று சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. உயிருக்கு போராடிக் கொண்டிருக்கும் அந்த பெண்ணுக்கு நியாயம் கிடைக்க வேண்டும் என மாதர் சங்கத்தினர் கோரிக்கை விடுத்துள்ளனர்.
0
0