சசிகலாவின் விடுதலைக்கு ‘ஆப்பு’ வைத்த சிறைத்துறை : விடுதலை ஆவணங்களுடன் அமலாக்கத்துறை நோட்டீசும் ஒப்படைப்பு

27 January 2021, 5:52 pm
sasikala 1- updatenews360
Quick Share

பெங்களூரூ : சொத்து குவிப்பு வழக்கில் தண்டனை அனுபவித்து இன்று விடுதலையான சசிகலாவுக்கு அமலாக்கத்துறையின் நோட்டீஸை கர்நாடக சிறைத்துறை வழங்கியிருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

சொத்து குவிப்பு வழக்கில் கைதாகி பெங்களூரூ பரப்பன அக்ரஹாரா சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். தண்டனை காலம் முடிந்த ஜன., 27ம் தேதி அவர் விடுதலை செய்யப்படுவார் என அறிவிக்கப்பட்டது. ஆனால், அதற்கு முன்னதாக,
திடீரென உடல்நலக்குறைவு ஏற்பட்டதால், கடந்த 20ம் தேதி பெங்களூரூ அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். அப்போது, அவருக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டது.

இதையடுத்து, சிகிச்சைக்கு பிறகு அவர் தொற்றில் இருந்து குணமடைந்தார். இருப்பினும், சர்க்கரை நோய், தைராய்டு உள்ளிட்ட நோய்களின் பாதிப்பிற்கு சசிகலாவிற்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

விடுதலை செய்வதற்கான அனைத்து ஆவண பணிகளும் நிறைவடைந்த நிலையில், அவர் இன்று விடுதலை செய்வதாக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. விடுதலை தொடர்பான ஆவணங்களில் மருத்துவமனைக்கு நேரில் சென்று அதிகாரிகள் கையெழுத்துப் பெற்றுக் கொண்டனர். சசிகலாவின் விடுதலையை அமமுக தொண்டர்கள் இனிப்புகள் வழங்கியும், பட்டாசுகளை வெடித்தும் கொண்டாடினர்.

இந்த நிலையில், மருத்துவமனையில் சசிகலாவிடம் விடுதலை ஆவணங்களை ஒப்படைக்கையில், அமலாக்கத்துறையின் நோட்டீஸையும் கர்நாடக சிறைத்துறை வழங்கியுள்ளது. இது சசிகலாவின் தரப்பினருக்கு பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கடந்த ஆண்டு சசிகலா மற்றும் அவரது உறவினர்களின் வீடு மற்றும் அலுவலகங்களில் வருமான வரித்துறையினர் சோதனை நடத்தியது தொடர்பாக இந்த நோட்டீஸ் அளிக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

சசிகலா விடுதலையாகிய கொண்டாட்டம் இன்னும் நிறைவடையாத நிலையில், அமலாக்கத்துறையினரின் நோட்டீஸ் அமமுகவினருக்கு பேரிடியாக அமைந்துள்ளது.

Views: - 0

0

0