மாற்றுத்திறனாளி இளைஞருக்கு மூன்று சக்கர சைக்கிள் வழங்கிய கார்த்தி சிதம்பரம்
Author: kavin kumar10 October 2021, 10:19 pm
கோவை: கோவை வந்த சிவகங்கை பாராளுமன்ற தொகுதி உறுப்பினர் கார்த்தி சிதம்பரம் மாற்றுத்திறனாளி இளைஞருக்கு மூன்று சக்கர சைக்கிள் வழங்கினார்.
கோவை மாவட்டத்தில் சிவகங்கை பாராளுமன்ற உறுப்பினர் கார்த்தி சிதம்பரம் காங்கிரஸ் கட்சியினரை சந்தித்து வருகறார். கோவை வந்த அவருக்கு காங்கிரஸ் கட்சியின் பல்வேறு பிரிவினர் சார்பாக சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டது. இதனை தொடர்ந்து கோவை அவினாசி சாலையில் உள்ள ஜென்னிஸ் ஓட்டல் அரங்கில் கோவை மாவட்ட காங்கிரஸ் கட்சியினருடன் ஆலோசணையில் ஈடுபட்டார்.இதனை தொடர்ந்து மாநில இளைஞர் காங்கிரஸ் ஒருங்கிணைப்பாளரும்,மாவட்ட வர்த்தக அணி தலைவரும் ஆன ஹரிஹரசுதன் ஏற்ப்பாட்டில் நடைபெற்ற நலத்திட்ட உதவி நிகழ்ச்சியில், மாற்றுத்திறனாளி இளைஞர் மணிகண்டன் என்பவருக்கு மூன்று சைக்கிளை அவர் வழங்கினார்.இதில் ஐ.என்.டி.யூ.சி.கோவை செல்வன், முன்னாள் எம்எல்ஏ பழனிச்சாமி பி.டி மோகன்ராஜ், பாலு டென்னிஸ் செல்வராஜ், காமராஜ், காளிமுத்து, ராம்குமார் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.
0
0