வீடுகள், கோவில்களில் மிளிர்ந்த தீபம் : தமிழகம் முழுவதும் திருக்கார்த்திகை பண்டிகை உற்சாகக் கொண்டாட்டம்!!

Author: Babu Lakshmanan
19 November 2021, 7:36 pm
Quick Share

நாகர்கோவில் : குமரி மாவட்டத்தில் திருக்கார்த்திகை பண்டிகையை ஒட்டி ஏராளமான பெண்கள் வீடுகளில் தீபம் ஏற்றி உற்ச்சாகமாக கொண்டாடினர்.

இந்துக்களின் பண்டிகைகளில் ஒன்றாக திருக் கார்த்திகை பண்டிகை விளங்குகிறது. திருகார்த்திகை என்றாலே நம் கண் முன்தோற்றுவது தீபம் ஏற்றுதல் தான். இதனால் இப்பட்டியலை டிரை தீம் திருநாள் என்றும் கூறுகின்றனர். இவ்வாறு சிறப்புமிக்க திருக்கார்த்திகை பண்டிகை தினமான நேற்று குமரி மாவட்டத்தில் ஏராளமான பெண்கள் வீடுகளின் முன் வண்ண கோலமிட்டு அகல் விளக்குகள் ஏற்றி உற்சாகமாக கொண்டாடினர்.

திருக்கார்த்திகை பண்டிகையொட்டி நாகர்கோவில், வடசேரி, மீனாட்சிபுரம், பார்வதி புரம், பறக்கை, சுசீந்திரம் ,அஞ்சுகிராமம், கொட்டாரம் உள்ளிட்ட பகுதிகளில் சாலையோரம் குவியல் குவியலாக அகல் விளக்குகள் விற்பனைக்கு வந்தது. இதனை பொதுமக்கள் ஆர்வத்துடன் வாங்கிச் சென்றனர். இதனால் கடை வீதிகளில் மக்கள் கூட்டம் அலைமோதியது. அதேபோல் ஒரு பனை ஓலை ரூ.50 முதல் ரூ.100 வரை விற்பனை செய்யப்பட்டது.

அதேபோல், மாவட்டத்தில் பிரசித்தி பெற்ற கோவில்களனான கன்னியாகுமரி காசி விஸ்வநாதர் கோவிலில் 1008 விளக்குகளில் தீபம் ஏற்றப்பட்டது. மேலும், பகவதி அம்மன் கோவில், சுசீந்திரம் தாணுமாலய சுவாமி கோயில், கன்னியாகுமரி காசி விஸ்வநாதர் கோயில், நாகர்கோவில் நாகராஜா கோவில், பறக்கை மதுசூதன பெருமாள் கோயில் ,பூதப்பாண்டி பூதலிங்கசுவாமி கோவில், திருவட்டார் ஆதிகேசவ பெருமாள் கோயில்களில் சிறப்பு பூஜை மற்றும் தீபம் ஏற்றப்பட்டது.

ஒரு சில கோயில்களில் சொக்கப்பனை கொளுத்தும் நிகழ்ச்சியும் நடைபெற்றது. கிராமங்களில் சிறுவர்கள், இளைஞர்கள் சொக்கபனை கொழுத்தியும், பழைய டயர்களை சாலையில் எரித்து உற்ச்சாகமடைந்தனர். மேலும், திருக்கார்த்திகை பண்டிகையின் மற்றொரு அங்கமாக விளங்கும் கொழுக்கட்டையை வீடுகளில் பெண்கள் தயார் செய்து பூஜை அறையில் சாமிக்கு படையல் வைத்து வழிபட்டனர்.

Views: - 365

0

0