மனநலம் பாதித்த சிறுமிக்கு பாலியல் தொல்லை : முதியவருக்கு 20 ஆண்டு சிறை தண்டனை விதிப்பு

Author: Babu Lakshmanan
10 May 2022, 1:49 pm
Quick Share

கரூர் : மனநலம் பாதிக்கப்பட்ட 16 வயது பெண்ணிற்கு பாலியல் தொந்தரவு செய்த முதியவருக்கு 20 ஆண்டு சிறை தண்டனை விதித்து கரூர் மகிளா நீதிமன்றம் தீர்ப்பு அளித்துள்ளது.

கரூர் மாவட்டம் குளித்தலை அடுத்துள்ள ஆர்சம்பட்டியை பகுதியை சேர்ந்த மனநலம் பாதிக்கப்பட்ட 16 வயது சிறுமியை, அதே பகுதியை சேர்ந்த காளிமுத்து (66). கடந்த 11-01-21- ல் பாலியல் கொடுமை செய்துள்ளார். பாதிக்கப்பட்ட பெண்ணின் தாய் குளித்தலை காவல் நிலையத்தில் புகார் அளித்தார். புகாரின் பேரில் குளித்தலை காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டனர்.

இந்நிலையில் இன்று மனநலம் பாதிக்கப்பட்ட பெண்ணிற்கு பாலியல் தொந்தரவு செய்த முதியவருக்கு 20 ஆண்டு சிறை தண்டனயும், 100 ரூபாய் அபராதம் விதித்து கரூர் மகிளா விரைவு நீதிமன்ற நீதிபதி நசீமா பானு தீர்ப்பு வழங்கினார்.

பாலியல் தொல்லைக்கு உட்பட்ட அந்த பெண் மனநலம் பாதிக்கப்பட்டவர் என்பதால் அவருக்கு தமிழக அரசு 4 லட்சம் இழப்பீடு வழங்க வேண்டும் என தீர்ப்பில் கூறியுள்ளார்.

Views: - 555

0

0