“இரு சக்கர வாகனத்திற்கு குறி வைத்த வடமாநில இளைஞர்”- போட்டு தள்ளிய 5 இளைஞர்கள்!

Author:
25 June 2024, 1:51 pm
Quick Share

கரூர் மாவட்டம், வாங்கல் பகுதியை சேர்ந்த ஆம்புலன்ஸ் டிரைவர் வினோத், பெயிண்டர் கதிர்வேல், அதே பகுதியை சேர்ந்த பாலாஜி, முத்து, கரண்ராஜ் ஆகிய 5 பேர் கடந்த சனிக்கிழமை வாங்கல் காவிரி ஆற்றங்கரையில் மதுபானம் அருந்தியுள்ளனர். அப்போது அந்த வழியாக வந்த வட மாநில இளைஞர் ஒருவர் அவர்கள் நிறுத்தி வைத்திருந்த இருசக்கர வாகனம் ஒன்றை எடுத்துச் செல்ல முயற்சித்ததாக கூறப்படுகிறது.

இதை கண்டு ஆத்திரம் அடைந்த மது போதையில் இருந்த 5 இளைஞர்களும் அந்த வட மாநில இளைஞரை நிர்வாணப்படுத்தி, கட்டை மற்றும் கைகளில் கிடைத்த பொருட்களை வைத்தும், கால்களால் உதைத்தும் அடித்து துன்புறுத்தியுள்ளனர். இதில் வடமாநில இளைஞர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளார்.காவிரி ஆற்றங்கரையில் பிரேதம் கிடந்த தகவல் அறிந்த வாங்கல் காவல் நிலைய போலீசார் வட மாநில இளைஞரின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக கரூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

வட மாநில இளைஞரை அடித்து துன்புறுத்திய வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலான நிலையில், வீடியோவில் இருந்த நபர்கள் குறித்து விசாரணை நடத்தி ஆம்புலன்ஸ் டிரைவர் வினோத் மற்றும் பெயிண்டர் கதிர்வேல் ஆகிய இருவரையும் போலீசார் கைது செய்தனர். மேலும், தப்பியோடிய பாலாஜி, முத்து, கரண்ராஜ் ஆகிய மூவரையும் வலை வீசி தேடி வருகின்றனர்.உயிரிழந்த வட மாநில இளைஞர் மனநலம் பாதிக்கப்பட்டவர் என்றும் கூறப்படுகிறது. இச்சம்பவம் அப்குதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Views: - 164

0

0