மங்களம் பொங்கும் ஆடி முதல் வெள்ளி… அம்மன் கோயில்களில் பக்தர்கள் சிறப்பு வழிபாடு!!

Author: Babu Lakshmanan
23 July 2021, 12:39 pm
aadi - updatenews360
Quick Share

ஆடி மாத முதல் வெள்ளியை முன்னிட்டு தமிழகம் முழுவதும் உள்ள கோவில்களில் அதிகாலை முதல் பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்து வருகின்றனர்.

வருடம் முழுவதும் உள்ள 12 மாதங்களிலும் அம்மனை வழிபட எத்தனை வெள்ளிக்கிழமைகள் வந்து போனாலும், ஆடி மாதத்தில் வரும் வெள்ளிக்கிழமை எனது தனிப்பெருமை பெற்று விளங்குகிறது. ஆடி மாதத்தின் முதல் வெள்ளிக்கிழமையான இன்று தமிழகம் முழுவதும் உள்ள கோவில்களில் அதிகாலை முதல் பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்து வருகின்றனர்.

கரூரில் உள்ள அருள்மிகு மாரியம்மன் கோவிலில் பக்தர்கள் அதிகாலை முதலே வரிசையில் நின்று ஏராளமானோர் சுவாமி தரிசனம் பெற்றனர். அதேபோல, வேம்பு மாரியம்மன் ஆலயத்தில் அம்மனுக்கு சிறப்பு அலங்காரங்கள் செய்யப்பட்டு தீபாராதனைகள் காண்பிக்கப்பட்டது. பக்தர்கள் ஏராளமானோர் வரிசையில் நின்று சாமி தரிசனம் பெற்றுச் சென்றனர்.

Views: - 270

0

0