எடப்பாடியாரை புறம் பேசுபவர்கள் இனியாவது திருந்தட்டும் ; கரூரில் ஒட்டப்பட்ட போஸ்டர்களால் பரபரப்பு..!

12 September 2020, 2:31 pm
eps poster 1- updatenews360
Quick Share

கரூர் : முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமிக்கு ஆதரவாக கரூரில் 23 திட்டங்களை பட்டியலிட்டு கரூரில் ஒட்டப்பட்டுள்ள போஸ்டர்கள் ஒட்டப்பட்டுள்ளன.

தமிழக சட்டசபைக்கு இன்னும் 8 மாதங்களில் தேர்தல் வர இருக்கிறது. இதற்காக, அனைத்து அரசியல் கட்சிகளும் கூட்டணி மற்றும் சீட் பேரங்களில் ஈடுபட்டு வருகின்றனர். மேலும், அரசின் சாதனைகளை சொல்லி வாக்குகளை சேகரிக்க ஆளும் கட்சி திட்டமிட்டுள்ளது. அதேவேளையில், அரசின் குறைகளை எடுத்துச் சொல்லி தேர்தல் பிரச்சாரத்தை முன்னெடுக்க எதிர்கட்சிகள் திட்டமிட்டுள்ளன.

இந்த நிலையில், கரூரில் முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமிக்கு ஆதரவாக, “எடப்பாடியாரை புறம் பேசுபவர்கள் இதைப் படித்தாவது திருந்தட்டும்,” என்னும் தலைப்பில் தமிழக அரசின் 23 திட்டங்களை பட்டியலிட்டு முக்கிய பகுதிகளில் போஸ்டர்கள் ஒட்டப்பட்டுள்ளன. அந்தப் போஸ்டரில் எடப்பாடியாரை குறை சொன்னால் நாக்கு அழுகிவிடும் என்றும், இந்தத் திட்டங்கள் ஒரு சிலவே பட்டியலிட்டால் கணக்கிலடங்காது என்ற வாசகங்களோடு, நேதாஜி சுபாஷ் சேனை – தமிழ்நாடு என்கின்ற பெயரில் பெரிய போஸ்டர்கள் கரூர் நகரம் முழுவதும் ஒட்டப்பட்டு உள்ளது.

இதில் எடப்பாடி பழனிசாமி நின்று கொண்டிருப்பது போலவும், அருகில் பால்வளத்துறை அமைச்சர் ராஜேந்திர பாலாஜி படம் இடம்பெற்றுள்ளது. இந்த போஸ்டர்கள் அ.தி.மு.க.வினருக்கு புதிய உத்வேகத்தை ஏற்படுத்தும் என அக்கட்சியினர் கூறி வருகின்றனர்.

Views: - 0

0

0