சூடுபிடிக்கும் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல்… அதிமுக வேட்பாளர்களை தேர்வு செய்வதற்கான நேர்காணல் தீவிரம்..!!

Author: Babu Lakshmanan
28 January 2022, 1:06 pm

கரூர் மாவட்டத்தில் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலுக்காக அதிமுக சார்பில் போட்டியிடும் வேட்பாளர்களிடம் முன்னாள் அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் நேர்காணல் நடத்தி வருகிறார்.

கரூர் மாவட்டத்தில் உள்ள ஒரு மாநகராட்சி, 3 நகராட்சி, 8 பேரூராட்சிகள் என மொத்தம் 195 வார்டு உறுப்பினர்களுக்கான தேர்தல் பிப்ரவரி 19 தேதியன்று நடைபெற உள்ளது. இந்நிலையில் நடைபெற உள்ள நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் 195 வார்டுகளிலும் அதிமுக சார்பில் போட்டியிடும் கழகத் தொண்டர்களிடம் முன்னாள் அமைச்சரும், கரூர் மாவட்ட கழகச் செயலாளருமான எம்.ஆர்.விஜயபாஸ்கர் அவர்கள் நேர்காணல் செய்து வேட்பாளர்களை தேர்ந்தெடுக்கும் பணியில் ஈடுபட்டு வருகிறார்.

இதில் விருப்பமனு அளித்த அதிமுக தொண்டர்கள் ஆர்வமுடன் கலந்துகொண்டு வருகின்றனர். இந்த நேர்காணல் ஆனது இன்று துவங்கி நாளை வரை நடைபெற உள்ளது. மேலும் அதிமுக நகரக்கழக, கிளைக்கழக நிர்வாகிகளுக்கு உள்ளாட்சித் தேர்தலில் மக்களிடம் எவ்வாறு அணுக வேண்டும், வெற்றி வியூகங்கள் குறித்து ஆலோசனைகளை வழங்கினார். இந்நிகழ்ச்சியில் மாவட்ட அவைத்தலைவர் ஏ.ஆர்.காளியப்பன் மற்றும் நகர கழக பேரூர் கழக நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.

  • mansoor ali khan directing a full movie in sanskrit language மன்சூர் அலிகான் இயக்கும் முழு நீள சமஸ்கிருத திரைப்படம்! அதிர்ச்சியில் ரசிகர்கள்?