2 மாதங்களுக்கு பிறகு ஆலயங்களில் பக்தர்கள் சுவாமி தரிசனம் : விதிகளை பின்பற்றி தரிசனத்திற்கு அனுமதி

5 July 2021, 11:20 am
Quick Share

கரூர் : கரூரில் இரண்டு மாதங்களுக்குப் பிறகு திறக்கப்பட்ட ஆலயங்கள் குறைந்தளவு பக்தர்கள் சுவாமி தரிசனத்திற்கு அனுமதிக்கப்பபட்டு வருகின்றனர்.

கரூரில் இன்று இரண்டு மாதங்களுக்குப் பிறகு திறக்கப்பட்ட ஆலயங்கள் அரசு விதிமுறைகளை பின்பற்றி அனைவரும் மாஸ்க் அணிவது, சனிடைசர் பயன்படுத்துவது வெப்பமானி கொண்டு பரிசோதனைக்குப் பின்னரே பக்தர்களுக்கு கோவிலுக்குள் சென்று சுவாமி தரிசனம் செய்ய அனுமதிக்கப்படுகின்றனர்.

இதன் ஒரு பகுதியாக கரூரில் உள்ள அருள்மிகு ஸ்ரீ கல்யாண பசுபதீஸ்வரர் ஆலயத்தில் பேரிகார்டு அமைக்கப்பட்டு சமூக இடைவெளியை கடைபிடிக்கும் வகையில் வட்டங்கள் வரையப்பட்டு வரிசையாக நின்று சாமி தரிசனம் பெற்றுச் சென்ற பக்தர்கள், மேலும் அதே போன்று அருள்மிகு ஸ்ரீ சித்தி விநாயகர் ஆலயத்தில் பாதுகாப்பு நெறிமுறைகளை பின்பற்றி பக்தர்கள் சுவாமி தரிசனம் பெற்றனர். முன்னதாக சுவாமிக்கு சிறப்பு அபிஷேகங்கள் மற்றும் தீபாராதனை காண்பிக்கப்பட்டது.

கொரோனா பெருந்தோற்று இரண்டாவது அலை தீவிரமடைந்து ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்பட்டு பொது போக்குவரத்துக்கு தடை செய்யப்பட்டது. அதன் பின்னர் தொற்று குறைந்த சென்னை உள்ளிட்ட 27 மாவட்டங்களில் பொது போக்குவரத்துகள் மாவட்டத்திற்குள் இயங்கி வந்தது. கரூர் உள்ளிட்ட 11 மாவட்டங்களில் பொது பேருந்து போக்குவரத்து தடை செய்யப்பட்டு இருந்தது. இன்று முதல் தமிழகத்தில் ஒரே மாதிரியான தளர்வுகள் அளிக்கப்பட்டு மாநிலத்திற்குள் அனைத்து பொது பேருந்துகளும் செயல்படலாம் என தமிழக அரசு உத்தரவு பிறப்பித்தது.

இதனையடுத்து கரூர் மாவட்டத்தில் இன்று 55 நாட்களுக்கு பிறகு மீண்டும் பேருந்துகள் இயங்க தொடங்கின. கரூர் மாவட்டத்தில் கரூர் – 1, கரூர் – 2, அரவக்குறிச்சி, குளித்தலை ஆகிய 4 பணிமனைகளில் இருந்து 90 நகரப் பேருந்துகள் மற்றும் 115 புறநகர் பேருந்துகள் என 205 பேருந்துகள் அரசு வழிகாட்டுதலின்படி, சுகாதார பணிகளை மேற்கொண்டு, கிருமி நாசினி தெளிக்கப்பட்டு பொதுமக்களை முககவசத்துடன் அனுமதிக்கப்பட்டு கரூர் பேருந்து நிலையத்திலிருந்து மாவட்டத்திற்குள் அனைத்து பகுதிகளுக்கும் பேருந்துகள் தொடங்கியது. பயணிகளின் வருகை பொருத்து கூடுதல் பேருந்துகள் இயக்கப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Views: - 176

0

0