செல்போன் வெடித்து விபத்து.! தாய் மற்றும் இரு குழந்தைகள் பலி.!!

10 August 2020, 2:39 pm
Karur Cellphone Blast - Updatenews360
Quick Share

கரூர் : பூட்டிய வீட்டினுள் உறங்கிக்கொண்டிருந்த தாய் இரண்டு மகன்கள் உள்ளிட்ட 3 பேர் செல்போன் வெடித்த உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

ராமநாதபுரம் மாவட்டம் கடம்பனேந்தல் பகுதியைச் சேர்ந்த கருப்பையா குப்பம்மாள் தம்பதியினரின் மகள் முத்துலட்சுமி வயது 29 இவருக்கும் அதே பகுதியைச் சேர்ந்த பாலகிருஷ்ணன் (வயது 31) என்பவருக்கும் கடந்த 6 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடைபெற்றது.

சொந்த ஊரில் போதிய வருவாய் இல்லாததால் அவர்கள் பிழைப்பு தேடி கரூர் மாவட்டம் ராயனூர் பகுதியில் குடியேறினர் அங்கு சிறிய அளவிலான உணவு விடுதி ஒன்றை நடத்தி வந்துள்ளனர். கடந்த இரண்டரை ஆண்டுக்கு முன்னர் பாலகிருஷ்ணன் குடும்ப பிரச்சினை மற்றும் கடன் பிரச்சினை காரணமாக மனைவி மகன்களை விட்டு பிரிந்து சென்றுவிட்டார்.

இந்தநிலையில் முத்துலட்சுமி தனது 2 மகன்கள் மற்றும் பெற்றோருடன் வசித்து வந்துள்ளார். மேலும் ஊரடங்கு நேரத்தில் கடைகள் திறக்கப்படாததால், போதிய வருவாய் இன்றி முத்துலட்சுமி தவித்து வந்துள்ளார். வேறு கூலி வேலைக்கு செல்லாத செல்ல முடியாத நிலையில் வந்துள்ள அவர் கடை நடத்துவதற்கு கடன் வாங்கி குடும்பத்தை நடத்தி வந்தார்.

இந்த நிலையில் கடன் பிரச்சினையை அதிகரிக்கவும் போதிய வருவாய் இல்லாததால் தனது பெற்றோரை ஊருக்குச் சென்று கடன் வாங்கி வருமாறு அனுப்பி உள்ளார். நேற்று இரவு முத்துலட்சுமி சோபாவில் படுத்துக் கொண்டே செல்போனில் சார்ஜ் போட்டுக்கொண்டு செல்போனில் பேசிக்கொண்டிருந்தார்.

தொடர்ந்து இன்று அதிகாலை செல்போனில் சார்ஜ் அதிகரிக்கவும் செல்போனில் மின்சாரம் பாய்ந்து வெடித்தது. இதில் முத்துலட்சுமி உடல் மீது பரவியது. இதனால் முத்துலட்சுமி அலறி துடித்தார். முத்துலட்சுமியின் அலறல் சத்தம் கேட்டு அக்கம்பக்கத்தினர் ஓடிவந்து வீட்டின் பூட்டை உடைத்து உள்ளே சென்றபோது முத்துலட்சுமி முழு உடல் முழுவதும் எரிந்த நிலையில் உயிரிழந்து கிடந்தார்.

முத்துலட்சுமியின் மகன்கள் ரஞ்சித் (வயது 3), தட்சித் (வயது 2) ஆகிய இரண்டு பேரும் மூச்சுத்திணறலால் அவதிப்பட்டு கொண்டு இருந்தனர். அவர்களை மீட்டு கரூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர் ஆனால் அவர்கள் வழியிலேயே உயிரிழந்தனர் இச்சம்பவம் குறித்து தான்தோன்றிமலை போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.